திறனற்ற ஆட்சியை மறைக்க திமுக பொய் வழக்கு : திராவிட மாடல் சாதனை

சமூக வலைதளத்தில் கள்ளசாராயம் காய்ச்சிய திமுகவினர் 5 பேர் கைது என தகவல் பரப்பியதாக பொய் வழக்கின் கீழ் பாஜக ஆதரவாளரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து இன்று பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய திமுகவினர் என போட்டோஷாப் செய்து, சமூக வலைதளத்தில் பரப்பினார் என, பாஜக ஆதரவாளரான சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த சரவணபிரசாத் மீது திமுக இளைஞர் அணியை சேர்ந்த பாலசுப்ரமணியம் பொய் புகார் அளித்துள்ளார்.  திமுகவுக்கு எதிரான ஆதார பூர்வமான பதிவுகளுக்காக மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (06.06.2023) கோவையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இது சம்மந்தமாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டரில்: “RSS பொறுப்பாளர் திரு. சரவணபிரசாத் அவர்கள் செய்தித்தாளில் வந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  ஆளும் அராஜக திமுக அரசு கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நசுக்குவதோடு எதிர் கருத்தை ஏற்க மறுப்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது. அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்”. எனத் தெரிவித்திருந்தார்,

கைது செய்யப்பட்டது முதல் 200ரூபாய் உடன் பிறப்புகள் சரவணபிரசாத் மீது சமூகவலை தளத்தில் அவதூறுகளை அள்ளி தெளிக்க ஆரம்பித்தனர். நீதிமன்றத்தில் அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய திமுகவினர் என்ற போட்டோவை  பகிர்ந்ததாக மட்டுமே தெரிவித்த நிலையில், இன்று 07/06/2023 பெயில் பெற்று விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  அவர் கைது செய்யப்பட்டது முதல் பாஜக சமூக ஊடக பிரிவினர், சட்டப் பிரிவினர் திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் அவரோடு இருந்து அவரின் பிணைக்குப் பாடுபட்டுள்ளனர்.

திறனற்ற திமுக அரசு தன்னை விமர்சிக்கும் பாஜக ஆதரவாளர்கள், மற்றும் பிரமுகர்களை கைது செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.  மதுரையை சேர்ந்த மாரிதாஸ், கார்த்தி கோபிநாத், கல்யாணராமன், கிருஷ்ணகுமார் முருகன், செளதா மணி, செல்வகுமார், கட்டெறும்பு (எ) இசக்கி, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின் விடுதலையும் செய்யப்பட்டனர்.

சாதாரண சமூக ஊடக பதிவர்களுக்கே பயப்படும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசு, வாயால் வடை சுடுவது வேடிக்கை.

பாஜக கருத்துகளை சமூக ஊடகத்தில் பதிவு செய்யும் பலர் பாஜக உறுப்பினர்கள் அல்ல, தேச நலன் சார்ந்த சமூக ஆர்வலர்கள் என்பது இந்த அரசுக்குப் புரியவில்லை. கைது நடவடிக்கைகள் மேலும் பல சமூக ஊடகப் போராளிகளை உருவாக்கும் என்பதை இந்த அரசு புரிந்து கொள்வது நல்லது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top