ரயில் விபத்துக்கு ஒரு பின்னணி இருக்குமா?
இருந்தால் அது யார் யாருக்கு தெரிந்து இருந்திருக்கும்?
இதுதான் இப்போதைய கேள்வியாக அனைவர் மனதிலும் இருக்கிறது!
மகாபாரதத்தில், அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் தீ பற்றியதால் எரிந்து சாம்பலானார்கள் என்பது செய்தி!
இந்த அரக்கு மாளிகை விபத்துக்கு ஏதாவது பின்னணி இருக்குமா? என்னும் கேள்வி மகாபாரதத்தில் எழுப்பப்பட்டது!
அப்படி பின்னணி இருந்திருந்தால் அதை யார் திட்டமிட்டிருப்பார்கள்? அந்த திட்டம் யார் யாருக்கு தெரிந்து நடந்திருக்கும்?
– என்றெல்லாம் ஆராய்ச்சிகள் மகாபாரதத்தில் நடந்ததாக நாம் படிக்கிறோம்!
சி.பி.ஐ விசாரணை என்றதும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் மற்றவர்களும் ஏன் அச்சப்படவேண்டும்!
இங்கே இப்போது இந்த ஒரிசா ரயில் விபத்து கடந்த 2 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நடந்தது!
288 பயணிகளின் மரணத்திற்கு காரணமான அந்த விபத்து மிகுந்த துயரத்துக்குரியது!
நாட்டு மக்கள் மத்தியில் உடனே துயரம் மேலிட்டது! ஆனால் எதிர்கட்சியினர் மத்தியில் ஒரு குரூர ஆனந்தம் காணப்பட்டது. பிண அரசியலுக்கு கிடைத்த வாய்ப்பல்லவா! கண்டனங்களும், குற்றச்சாட்டுகளும், ராஜினாமா கோரிக்கைகளும் எழுந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதவி விலகுவாரா? எதிர்க்கட்சிகள் ரயில்வே அமைச்சர் பதவி விலக கோரிக்கையும் வைத்தனர்.
Box: விபத்துக்கான காரனம் ரயில்வே எலட்ரானிக் இண்டர்லாக் சிஸ்டத்தில் 100 சதவிகிதம் இல்லை! அப்படி இருக்கும்போது விபத்து நடந்திருக்கிறதென்றால் ஏன் சி.பி.ஐ விசாரிக்கக்கூடாது?
மோடி அரசுக்கு 2024 ல் வாக்குகள் குறைய வாய்ப்புகள் உண்டா என தொலைக்காட்சிகளில் வாதிட்டார்கள்!
விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என சொல்வதும், விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதும் கண்துடைப்பு வேலைகளே!
கடந்த காலங்களில் ரயில் விபத்து நேர்ந்தால் அமைச்சர் பதவி விலகுவார்! சிறிது நாட்கள் சென்றபின்பு மீண்டும் அதைக்காட்டிலும் உயர்ந்த பதவியில் அமருவார்!
மக்களை திசை திருப்ப அரசுகள் காட்டும் வேடிக்கைதான் பதவி விலகல்!
ஆனால், நமது ரயில்வே அமைச்சர், விபத்து நடந்ததற்கு மறுநாள் மும்பை கோவா இடையிலான வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கும் நிகழ்சிக்காக கிளம்பிக் கொண்டிருந்தார் அதனை ரத்து செய்தார்.
அதிகாலை மூன்றுமணிக்குதான் ஒரிசாவுக்கு விமானம் இருந்தது!
அதிகாலைவரை தூங்காமல் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து உயிர்களை காப்பாற்றும் பணிகளையும் இறந்தவர்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியையும் இரவு முழுமையும் செய்து கொண்டிருந்தார் ரயில்வே அமைச்சர்!
அதிகாலை புவனேஸ்வர் வந்தார்! விபத்து நடந்த இடத்திற்கு சென்றார்! சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை என இரவு பகல் பாராமல் தீவிர பணியில் ஈடுபட்டார் ரயில்வே அமைச்சர்!
51 மணிநேரத்தில் அதே வழித்தடத்தில் மீண்டும் ரயில் வண்டிகள் ஓடத் துவங்கிய பின்புதான் ரயில்வே அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார்!
ரயில்வே அமைச்சர் இப்படி வேலை செய்ய வேண்டுமா? ராஜினாமா செய்து விட்டு ஓடவேண்டுமா?
நமது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் அவர்கள் அதிகம் படித்தவர், புத்திக்கூர்மை அதிகம் உள்ளவர், தியாக மனப்பான்மை கொண்டவர்! தேசப்பக்தி மிக்கவர்!
விபத்துக்கான காரணத்தை அவர் ஆராய்ந்தார்! அதிகாரிகளை விசாரித்தார்!
ரயில்வே விசாரனண அதிகாரிகள் விசாரித்தார்கள்!
”இண்டர்லாக்” என சொல்லப்படும் மின்சார மற்றும் எலக்ட்ரானிக் மற்றும் சென்சார் உதவியோடுதான் ரயில்வே சிக்னல்கள் இயங்குகின்றன!
மனிதர்களால் இயக்கப்படவில்லை!
விபத்திற்கு உள்ளான கோரமண்டல் ரயில் நேராக செல்லவேண்டிய பாதையை விட்டு லூப் லைன் என சொல்லப்படும் சரக்குரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பாதைக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது!
அப்படி திரும்பியதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது,
இண்டர்லாக் சிஸ்டப்படி இப்படி நடந்திருக்க முடியாது!
ஏதோ ஒரு மனிதசக்தி குறுக்கிட்டுதான் லூப் லைனுக்கு ரயில் மாறியுள்ளது. அதனால்தான் விபத்து நடந்துள்ளது என மதி நுட்பமுள்ள அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் கண்டறிந்ததாக சொல்லப்படுகிறது!
51 மணிநேரம் தூங்காத ரயில்வே அமைச்சர் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்-
” இண்டர்லாக் எலக்ரிக் பாய்ண்ட் சாதனத்தின் அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து சதித்திட்டம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” – என்றார்!
ரயில்வே இலாக்கா சார்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு புகார் தரப்பட்டது!
இப்போது சி.பி.ஐ குழுவினர் விசாரணையை துவங்கியுள்ளனர்!
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சி.பி.ஐ விசாரணையை குறை கூறுகிறார்!
ரயில்வே விபத்துக்கு சி.பி.ஐ விசாரனண எதற்கு என்கிறார் அவர்!
மம்தா கட்சியும், இடதுசாரி கட்சிகளும், பாஜக எதிர்ப்புக் கட்சிகளும் ‘விபத்துக்கு ஏன் சிபிஐ விசாரணை’ என்ற அதே பல்லவியை பாடுகின்றனர்.
பாஜக அரசு, காங்கிரஸ் அரசைப் போல துருப்பிடித்த தண்டவாளங்களில் ரயிலை இயக்கிக் கொண்டிருக்கவில்லை!
ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு கோடி ரூபாய் அளவில் செலவு செய்து இண்டர்லாக் முறையை பயன்பாட்டில் வைத்துள்ளோம்!
விபத்துக்கான காரணம் ரயில்வே எலட்ரானிக் இண்டர்லாக் சிஸ்டத்தில் 100 சதவிகிதம் இல்லை! அப்படி இருக்கும்போது விபத்து நடந்திருக்கிறதென்றால் ஏன் சி.பி.ஐ விசாரிக்கக்கூடாது?
சி.பி.ஐ விசாரணை என்றதும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் மற்றவர்களும் ஏன் அச்சப்படவேண்டும்!
விபத்துக்கு வருத்தம் தெரிவிக்காமல், துக்கம் அனுசரிக்காமல், இந்த விபத்து காரணமாக மோடி அரசு பின்னடைவை சந்திக்குமா? என்னும் கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பியுள்ளார்கள் என்றால் அங்கே இயல்பாகவே சந்தேகம் பிறக்கிறதே!
பாரதிய ஜனதாகட்சி துக்கம் காரணமாக தங்களின் கட்சிப்பணிகளை ஒத்திவைத்தபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ரயில் விபத்து காரணமாக பாஜக தோல்வியை சந்திக்குமா? என தொலைகாட்சிகளில் கேள்வி எழுப்பியது மக்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறதே!
மகாபாரதத்தில் அரக்கு மாளிகை சதித்திட்டம் இங்கேயும் நிகழ்த்தப்பட்டதா? என்னும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது!
அரக்குமாளிகை சதியில் பாண்டவர்கள் சாகவில்லை எழுந்து வந்து தங்களின் உரிமைஉள்ள தேசத்தின் அரசாட்சியை சிறப்போடு செய்தனர் என்பதுதான் வரலாறு என்பதை, சி.பி.ஐ விசாரணைக்கே பயந்துக்கிடக்கும் காங்கிரசாரும் மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்!
– குமரிகிருஷ்ணன்