கரூரில், தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை 

”என் வீட்டில் சோதனை நடக்கவில்லை, என் வீட்டில் சோதனை நடக்கவில்லை” எனத் தன்னை நிரபராதி போல் கூறி வந்த சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்ய இன்று காலை 13.06.2023 அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றது.  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வருமான வரித்துறையினர் சோதனைக்குச் சென்ற போது தாக்குதலில் ஈடுபட்ட அவரது அடிவருடி தொண்டர்கள் தற்போது அமலாக்கத் துறையே சோதனைக்குச் சென்றுள்ளதால் பயபக்தியோடு ஒத்துழைக்கிறார்கள் என்பது சிறப்பு செய்தி.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்தனர்.

இந்த வழக்கை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதால் சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இதை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 26.05.2023 முதல் 02.06.2023 வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் இறுதியில் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மேலும் சில இடங்களில் அவரது ஆதரவாளர்களின் வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 13.06.2023 கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வெங்கமேட்டைச் சேர்ந்த சண்முகம் செட்டியார் என்பவரது வீடு என மூன்று இடங்களில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தலைமை செயலகத்திலும் செந்தில் பாலாஜி அலுவலகத்திலும் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.  இதை அறிந்து தலைமைச் செயலகம் விரைந்த திமுக பிரமுகர்கள் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்த போதே ஆ.ராசா, கனிமொழி, என அமலாக்கத்துறையால் அரசியல் பிரபலங்கள் பலர் சிறைக்கு சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தச் சோதனை அரசியல் சோதனையே என்று கலக்கம் அடைந்துள்ளது திமுக.  முதல்வர் ஸ்டாலின் உட்பட முக்கிய திமுக பிரமுகர்கள்: அச்சத்தில் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி சிறைக்கு செல்லும் நாள் அதிகம் தூரத்தில் இல்லை என்றும் திமுகவினரே பேசிக் கொள்கிறார்களாம்!  

இந்த சோதனைக்கு பின் செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்படலாம் அல்லது செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top