நீட் தேர்வில் தேசிய அளவில் முதல்10 இடங்களில் 4 பேர் தமிழர்கள்

நீட் தேர்வு ரத்து ரகசியம், தெரிந்த உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்யாததால் இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. நடந்து முடிந்த இந்த ஆண்டுக்கான  ‘நீட்’ நுழைவுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியரின் மகன் பிரபஞ்சன், நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். முதல் 10 இடங்கள் பிடித்தோரில், நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வை ரத்து செய்யாததால் தமிழகத்திற்கு கிடைத்த இந்த பெருமை பற்றி கூறிய பெற்றோர்கள். இனியாவது நீட் தேர்வு ரத்து என்ற போலி நாடகத்தை திமுக நிறுத்த வேண்டும் என்றனர்.

நடப்பு கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, இந்த ஆண்டு, மே 7ம் தேதி நடந்தது. தமிழகத்தில், 1.44 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று 13.06.2023 இரவு வெளியாகின. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர், 720க்கு, 720 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார்.  நாட்டில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் பிரபஞ்சன், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள மேல்மலையனுாரைச் சேர்ந்தவர்.  இவரது தந்தை ஜெகதீஷ், விழுப்புரம் மாவட்டம், மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

மாணவர் பிரபஞ்சன், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள, சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

பிரபஞ்சன் போலவே, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் போரா வருண் என்பவரும், 720 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய கெளஸ்தவ் பெளரி என்பவர், 716 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும், சூர்ய சித்தார்த் என்பவர், 715 மதிப்பெண் பெற்று, 6ம் இடமும், வருண் என்ற மாணவர், 715 மதிப்பெண்ணுடன், 7ம் இடமும் பெற்றுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்ததாவது: “இன்று வெளியான நீட் தேர்வின் முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவ படிப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய திமுகவிற்கு இன்று வெளியான தேர்வு முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம்!” எனத் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமில்லாமல், முதலில் வந்த மாணவர் பிரபஞ்சனை அலைபேசியில் அழைத்து வாழ்த்தியதோடு, நான் உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் அனுப்பி வைக்கிறேன். இந்த மாநிலத்திற்கு உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் அனுப்பி வைக்கிறேன், இந்த மாநிலத்திற்கு உங்கள் சேவை பயன்படட்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அண்ணாமலை வாழ்த்துகளை தெரிவித்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top