முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக பொறுப்பாளர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசலை சேர்ந்தவர் செல்வபாலன் 29. பாஜக ஊடகப்பிரிவு செயலாளராக உள்ள இவர் சமூக வலைதளத்தில் முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக பதிவிட்டார் என்று தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரணை செய்த போலீசார் செல்வபாலன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கடந்த 15.06.2023 அன்று கைது செய்தனர். இவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் மாதத்தில் மட்டும் கன்யாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த செந்தில் குமார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கட்டெறும்பு என்கிற இசக்கி, சென்னையை சேர்ந்த சரவணபிரசாத், காஞ்சிபுரம் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் மீது கைது நடவடிக்கை எடுத்து உள்ளே வைக்க திமுக அரசு முயற்சி செய்தது. ஆனால் திமுகவினரின் அத்தனை முயற்சியும் தோல்வி அடைந்தது.
அதேசமயம் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் மீது தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் தமிழக முதல்வர் குறித்து பேசினால் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்து சிறையில் தள்ளுகிறது. திமுக செய்த ஊழல் பற்றி வாய் திறந்தால் வழக்கா என்ற கேள்வி தற்சமயம் பொதுமக்களிடம் வலுத்து வருகிறது.
ஒரு சாமனியனின் பேச்சுரிமையை நெறிக்கும் விதத்தில் திமுக செயல்படுகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.