நூற்றாண்டு விழா காணும் கலைஞர் கருனாநிதி அவர்களே, உங்களுக்காக முரசொலியில் பாராட்டு மடல்கள் எழுதப்படுகின்றன!
உங்களின் மிரட்டலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பணத்திற்கும் பயந்துபோன நடு நிலை பத்திரிக்கைகளும் உங்கள் புகழினைப் பாடுகின்றன!
நாங்களும் அந்த வரிசையில் அணி வகுக்கிறோம்!
எங்களால் பொய் எழுத முடியாது, எனவே உண்மை சம்பவம் ஒன்றினை இங்கே விளக்க முன்வருகிறோம்!
ஒரு கொலை வழக்கில் நீங்கள் குற்றஞ்சாட்டப் பட்டவர்!
இன்னும் அதன் விசாரணை பத்திரிக்கைகளில் நடந்த வண்ணமே இருக்கிறது! முடிவு பெறவில்லை!
எத்தனை நூற்றாண்டு விழாக்களை உங்களின் வாரிசுகள் நடத்தினாலும் நீங்கள் ஒரு அக்கியூஸ்ட் என்னும் கறை ஒருநாளும் மறையப் போவதில்லை!
1971 ல் நீங்கள் தமிழகத்தின் முதன்மை அமைச்சராக இருந்தீர்கள்!
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உங்களுக்கு நீங்களே ஒரு முனைவர் அதாவது டாக்டர் பட்டத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வாங்கிக் கொண்டீர்கள்!
உங்களின் ஒழுக்ககேடான செயல்பாடுகளும் சிந்தனைகளும் அன்றைய சமுதாயத்திற்கு நன்கு தெரிந்திருந்தது!
உங்களின் நன்பன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் 1965 ல் எழுதி வெளியிட்ட, வனவாசம் என்னும் புத்தகத்தில் உங்களைப்பற்றி எழுதியிருந்ததை அந்த சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர்களும் படித்திருப்பர்!
ஊரே படித்ததை பல்கலைக்கழக மாணவர்கள் படித்திருக்க மாட்டார்களா என்ன?
இதில் விசேசம் என்னவென்றால், கலைஞர் அவர்களே உங்களை மஞ்சள் பத்திரிக்கைகளில், மிகவும் மோசமான மஞ்சள் கதைகளை எழுதுபவர்தான் நீங்கள் என்னும் வகையில் கண்ணதாசன் எழுதியுள்ளார்!
இதையெல்லாம் படித்த சிதம்பரம் பல்கழக்கழக மாணவர்களின் மனத்திரையில் நீங்கள் ஒரு கீழ்தரமான நிலையில் தோன்றியிருப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை!
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்:
எதிர்த்துப் போராட்டம் செய்த மாணவர்கள் ஒரு கழுதையை வர வழைத்து அதன் கழுத்தில் ‘டாக்டர்’ என எழுதி பல்கலைக்கழக வளாகத்தில் உலவ விட்டார்கள்
எனவேதான் தங்களின் பல்கலைக்கழகத்தால், இந்த கீழ்தரமான கருனாநிதி பட்டம் வாங்கப்போகிறாரே என அறிந்த அந்த மாணவர்கள், அதை கடுமையாக எதிர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டனர்!
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவர்கள், ஒழுக்கங்கெட்டவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுப்பது சரியா? என கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகிறது!
”உங்கள் எதிர்ப்பை நீங்கள் ஜனநாயக முறைப்படி தெரிவியுங்கள், எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை! ஆனால், அரசின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழகம் பட்டம் வழங்குவதை தடுக்காதீர்” – என பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது, எனச் சொல்லப்படுகிறது!
முதலமைச்சராக இருந்த உங்களுக்கு பட்டம் வழங்கிய அதேதினத்தில் மாணவர்கள் அந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டனர்!
பல்கலைக்கழக சுவர்களில் உங்களின் படத்தை வரையாமல் ஒரு கழுதையின் படத்தை வரைந்து அதன் கழுத்தில் டாக்டர் பட்டத்தை எழுதி தொங்கவிட்டனர்!
அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு கழுதையின் கழுத்தில் டாக்டர் என எழுதி தொங்கவிட்டதாகச் சொல்லப்படுகிறது!
மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீங்கள் அந்த டாக்டர் பட்டத்தை மறுத்திருக்கலாம்!
அல்லது அந்த மாணவர்களை அழைத்து பேசியிருக்கலாம்!
அல்லது பட்டம் வாங்கிய பின்பு ஏற்புரை ஆற்றும் போது கூட மாணவர்களுக்கு பதிலளித்து பேசி மாணவர்களை சமாதானப்படுத்தியிருக்கலாம்!
இதில் எதையுமே செய்யாத நீங்கள் அமைதியாக பட்டத்தை பெற்றுக் கொண்டு சென்றீர்கள்!
இந்த பட்டத்தைதான் டாக்டர் டாக்டர் என்று ஊரெல்லாம் எழுதி வைத்தீர்கள்!
டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடந்த அன்று இரவே உங்களின் காவல் துறையினராலும் கட்சியினராலும் கழுதையை ஓடவிட்ட மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள் என்பதுதான் செய்தியாக வந்தது!
அன்றிரவே உதயக்குமார் என்னும் மாணவன் கொலை செய்யப்பட்டு பல்கலைகழக வளாகத்தில் உள்ள குளக்கரையில் கிடந்தான்!
உதயக்குமாரின் தாய் தந்தையர் அலறிக்கொண்டு காவல் நிலையம் சென்றார்கள்! வழக்குப் பதியப்பட்டது!
குற்றவாளி யார் என கண்டறியும் சூழலில்-
உச்ச அதிகாரத்தில் இருக்கும் தாங்கள் காவல் நிலையத்தோடு தொடர்பு கொண்டு பேசியதால் காவல் துறையினர் பிணமாக கிடந்த உதயக்குமாரின் தந்தையான பெருமாள் என்பவரை அழைத்து மிரட்டி “ இந்த உதயக்குமார் என் மகன் அல்ல” என எழுதி வாங்கி, கொலை வழக்கை முடித்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது!
கொலை செய்யப்பட்டது பெருமாளின் மகன் உதயக்குமார் இல்லை என்றால், கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் யார்? அவனை கொன்றவர்கள் யார்? யார்?
இதற்கெல்லாம் அந்த சம்மந்தப்பட்ட காவல் நிலையம் இதுவரை விசாரணை நடத்தவில்லை, பதில் காணப்படவில்லை!
காலஞ்சென்ற கருனாநிதி அவர்களே, நூற்றாண்டு காணும் கருனாநிதி அவர்களே இந்த வழக்கில் A1 அக்யூஸ்ட் நீங்கள்தான்!
உங்களுக்கான பட்டமளிப்பைதான் மாணவர்கள் எதிர்த்தார்கள்!
மாணவர்கள் எதிர்த்த காரணத்தாலேயே உங்களின் கட்சியினரும் உங்களின் காவல்துறையும் மாணவர்களை தாக்கியதாக செய்திகள் உள்ளன!
இந்த கொலை வழக்கை முடித்து வைக்கும் வகையில் நீங்களோ உங்களின் பரம்பரையோ தண்டணை அனுபவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
உதயகுமாருக்கு என்று நியாயம் கிடைக்குமோ? அதற்கென நாம் இறைவனை வேண்டுவோம்!
– குமரிகிருஷ்ணன்