அமலாக்கத்துறையின் அடுத்த விக்கெட் அனிதா ராதாகிருஷ்ணன்?

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அமைச்சர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல மேலும் பலர் மீது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே புலப்படுகின்றன.இந்தப்பட்டியலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கால்நடை வளம், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் உள்ள  அனிதா ராதா கிருஷ்ணனின் பெயர் முதல் இடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிகாலத்தில் 2006-ம் ஆண்டு வரை வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். இதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சி பதவிக்கு வந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது. இதை விசாரித்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அனிதா ராதாகிருஷ்ணன் சுமார் ரூ.5 கோடி அளவுக்கு  சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தார்கள். இதை தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2008-ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

14-.5.2001 முதல் 31.3.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கிய சுமார் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட அசையும் சொத்துக்களும், இதர அசையா சொத்துக்களும் அடங்கும்.


இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் மத்திய அமலாக்கத்துறைக்கு சென்றன. அமலாக்கத் துறையும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 2020-ல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து இதை முடுக்கி விட்டுள்ளது.
அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு  வந்துள்ளது. சிக்கியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகநாதன், சிவானந்தன், மகன்கள் அனந்தபத்மநாதன், ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
14-.5.2001 முதல் 31.3.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கிய சுமார் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட அசையும் சொத்துக்களும், இதர அசையா சொத்துக்களும் அடங்கும்.
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கடும் பின்னடைவாகும்.
தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கில் 19.4.2023 அன்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வலுவான ஆதரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது முறைகேடாக சம்பாதித்த பணத்தை தன் குடும்பத்தினர் பெயரில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளார். வியாபாரத்தில் லாபம் வந்தது என கணக்கு காட்டப்பட்டு இத்தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டு அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என அமலாக்கத்துறை ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளது. இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பால் தெளிவான விளக்கத்தை அளிக்க முடியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் 97 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 11 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டும். வழக்கு ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஜூன்௨௧ ந் தேதி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை ஆஜராகி வலுவாக வாதிட உத்தேசித்துள்ளது.
இந்த வழக்கில் சுதந்திர தினத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிறை தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவரது எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்படும். திருச்செந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட பிரகாசமான வாய்ப்பு உள்ளது என அரசியல் நோக்கர்கள்  தெரிவித்துள்ளனர்.

-ஆர்.பி.எம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top