தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பேரா. இராமஸ்ரீநிவாசன் சமீபத்தில் பிரபல அச்சு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்ததாவது: *அதிமுகவுக்கு திமுகவை ஆட்சியிலிருந்து இறக்குவது தான் நோக்கம். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை திமுக-வை அரசியலில் இருந்தே அகற்ற வேண்டுமென்பதுதான் நோக்கம், மத்திய அரசுடன் இணக்கமான சூழலைப் பின்பற்றி தமிழக வளர்ச்சிக்கு அதிக நிதி கோரிப் பெறாமல் கம்யூனிஸ்ட், கங்கிராஸ்சுடன் இணைந்து தெரு அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
தி.மு.க, பொறுப்புள்ள ஆளுங்கட்சியாக இல்லை, ரௌடிபோல் பேசிக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். இன்று காவல்துறையைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் போட்டு பாஜக நிர்வாகிகளைச் சிறையில் அடைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி இருப்பதுபோலத் தெரிகிறது. திமுக தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாங்கள் திருத்துவோம்!” என்று தெரிவித்திருந்தார்.