ஊழல்வாதிகள் தண்டனை பெறுவது உறுதி: பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் ஒருவரை ஒருவர் பாதுகாக்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் தண்டனை பெறுவது உறுதி” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மத்திய பிரதேசம் சென்ற பிரதமர் மோடி இன்று 27.06.2023 அன்று 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, பாஜகவின் பூத் கமிட்டியினருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ’இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்களை பெற்ற மத்திய பிரதேச மாநிலத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போபால் முதல் ஜபல்பூர் வரையிலான பயண நேரம் இனி குறையும். வந்தே பாரத் ரயில் மூலம் மாநிலத்தில் ரயில் போக்குவரத்து மேம்படும்.

பாஜகவை உலகின் மிகப்பெரிய கட்சியாக மாற்றியதில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தொண்டர்கள் தான், பாஜகவின் பெரிய பலமாக உள்ளனர். நாம் ஏசி அறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பவர்கள் அல்ல. மோசமான வானிலையிலும் மக்களுடன் இணைந்து பாடுபடுபவர்களாக உள்ளனர்.

2047ஆம் ஆண்டு வரை இந்தியா 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வரை இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற விரும்புகிறோம், நமது கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் நம் நாடு வளர்ந்த நாடாக மாறும்.

நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்காவும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

நான் அமெரிக்கா மற்றும் எகிப்து சென்ற போது, உங்களின் கடின உழைப்பு குறித்து என்னிடம் கூறினர். தற்போது, உங்களை வந்து சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பயனடைவார்கள்.

ஊழல்களில் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன.  காங்கிரஸ், திரிணமுல், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் ஊழலில் மூழ்கி உள்ளன. 7-0 ஆயிரம் கோடி மதிப்பு ஊழல் காரணமாக என்சிபி உள்ளது. ஒவ்வொரு ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளிக்கிறேன். ஊழல்வாதிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஊழல் செய்தவர்களை விட மாட்டோம், அவர்கள் சிறை செல்ல நேரிடும்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தப்ப எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் பாதுகாக்க நினைக்கின்றனர். ஆனால், உறுதியாக ஊழல்வாதிகள் தண்டனை பெறுவார்கள்.

முத்தலாக் சட்டத்தை எதிர்த்து, முஸ்லீம் பெண்களுக்கு எதிர்க்கட்சியினர் அநீதி இழைக்கின்றனர். மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்த விரும்புகின்றன. பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் சிந்திக்க துவங்கிவிட்டனர். சம உரிமை குறித்து அரசியல்சாசனம் பேசுகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், ஓட்டு வங்கி அரசியலை மனதில் வைத்து இதனை எதிர்க்கின்றனர்.

எதிர்க்கட்சிகளை வெறுக்கவில்லை. அவர்கள் மீது அனுதாபம் தான் ஏற்படுகிறது. பயம் காரணமாக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள், பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றன. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வென்றுவிடும் என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. இதனால், மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top