ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்

புதிதாக 5 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசம் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இன்று 27.06.2023 மத்திய பிரதேச மாநிலத்திற்கான 2 ரயில்கள் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் வகையில் 5 புதிய வந்தே பாரத் விரைவு ரயில சேவையை துவக்கி வைத்தார். ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழியாக இரண்டு வந்தே பாரத் ரயில்களும், இது தவிர கோவா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் முதல் வந்தே பாரத் ரயில் சேவையைப் பெற்றுள்ளது, கர்நாடகா வழியாக இரண்டாவது வந்தே பாரத் ரயிலும் இயக்கப்பட்டுள்ளது.

கோவா – மும்பை, பாட்னா – ராஞ்சி, போபால் – இந்தூர், போபால் – ஜபல்பூர், பெங்களூர் – ஹூப்ளி  உள்ளிட்ட 5 புதிய வழிதடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

மட்கான்-மும்பை வந்தே பாரத் ரயில் தாதர், தானே, பன்வெல், ரோஹா, கெட், ரத்னகிரி, கன்காவ்லி, திவிம் மற்றும் மட்கான் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

பெங்களூரு, ஹூப்ளி மற்றும் தார்வாட்டை இணைக்கும் வந்தே பாரத் உடன் இரண்டு அதிவேக ரயில்கள் கர்நாடகாவில் இயங்கத் தொடங்கும். இந்த ரயில் தென்மேற்கு ரயில்வேயில் இயக்கப்படும். இது யஷ்வந்த்பூர், தாவணகெரே மற்றும் ஹூப்ளி நிலையங்களில் நிறுத்தப்படும்.  மேலும், ஹூப்ளி மற்றும் தார்வாட் இடையே ரயிலில் பயணம் செய்யும் நேரம் 7 மணி நேரத்தில் இருந்து சுமார் 5 மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்னா மற்றும் ராஞ்சியை இணைக்கும் ரயிலாக பீகார் முதல் வந்தே பாரத் ரயிலைப் பெறவுள்ளது. இந்த ரயில் கயா, கோடெர்மா, ஹசாரிபாக் சாலை, பரஸ்நாத் மற்றும் பொகாரோ ஸ்டீல் சிட்டி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சுமார் 410 கி.மீ தூரத்தைக் கடக்கும்.

போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மத்தியப் பிரதேசம் மற்றும் போபாலில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது ரயிலாகும். இந்த ரயில் மாநிலத்தின் பல நகரங்களை இணைக்கும். ரயில் நின்று செல்லும் இடங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

போபால்-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூன்றாவது அதிவேக ரயிலாகும். இதனுடன், போபாலின் ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மூன்றாவது ரயில் இதுவாகும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் எண்ணிக்கை 23 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top