மலக்குழி மரணத்தில் தமிழகம் தான் முதலிடம் – தேசிய ஆணைய தலைவர் வேதனை

மலக்குழி மரணங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனை ஒழிக்க தூய்மை பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக அறிவித்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தேசிய ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை கோட்ட ரயில்வேயில் பணி புரியக்கூடிய தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று 27.06.2023 மதுரை ரயில்வே மண்டபத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. 

அதன் பின், தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது: ’மதுரை ரயில்வேயில் பணிபுரியும் தூய்மை 600க்கு 365தான் கிடைப்பதாகவும் தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் தராத ஒப்பந்த நிறுவனத்திற்கான அனுமதி ரத்து செய்ய வேண்டும் என கோட்ட மேலாளரிடம் கூறியுள்ளேன்.

இதுவரை ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு PF எண் கூட அளிக்கவில்லை எனவும், ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் இதுவரை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. ஆனால் சில பணியாளர்களிடம் போனஸ் வாங்கியது போல ஒப்பந்த நிறிவனங்கள் கையெழுத்து கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போனஸ் பெற்றால் மட்டுமே கையெழுத்து இட வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

தூய்மை பணியளர்களுக்கு ஊதியம் குறைவு என்பது தான் பிரதான பிரச்னையாக உள்ளது. ரயில்வேயில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்கள் மற்றும் பட்டியலின தூய்மை பணியாளர்களுக்கு எதிராக நிகழும் துன்புறுத்தல் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே அலுவலகங்களில் தொலைபேசி எண் மற்றும் அதிகாரிகள் பெயரை அச்சிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன் என்றார். மேலும் இது குறித்து தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக கூறி ரயில்வேயில் பணம் பெற்றுவிட்டு அந்த பணம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுக்கவில்லை என்றால் அந்த ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தை ரயில்வேக்கு மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்வேயில் கையால் மலம் அள்ளும் நிலை ஒழிக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் தற்போது கையால் மலம் அள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பணியாளர்களை ஈடுபடுத்திய ஒப்பந்த நிறுவனத்திற்கான அனுமதி தடை செய்யப்படும். கையால் மலம் அள்ளும் புகார் குறித்து உறுதியானால் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். கையால் மலம் அள்ளம் வீடியோ புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்படும் என்றார். கையால் மலம் அள்ளும் புகார் குறித்து விளக்கம் கேட்டு ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்படும் என தெரிவித்த வெங்கடேசன் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்த பணி முறையை ரத்து செய்ய வேண்டும்,ஆந்திரா கர்நாடகாவை போல DPS பணி முறையை அமல்படுத்த வேண்டும் என்றார்.

1993ல் இருந்து தமிழகத்தில் 225 பேர் மலக்குழி மரணங்கள் ஏற்பட்டுள்ளது . மலக்குழி மரணத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் , உரிய இயந்திரங்களை மாநில அரசு வாங்க வேண்டும் என்றார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலக்குழியில் இறங்க மாட்டேன் என தூய்மை பணியாளர்கள் உறுதியோடு இருக்க வேண்டும்.

ஏழ்மை நிலையால் சில தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் குழி , மலக்குழிகளில் இறங்கும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.  தற்போது நிரந்தர தூய்மை பணியாளர் ஓய்வுபெறும் போது அதற்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த தொழிலில் பட்டியலினத்தவர்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரமற்ற நலவாரியம் உள்ளது ஆனால் அதிகாரமுள்ள ஆணையம் இல்லை. எனவே மாநில அளவில் ஆணையம் வேண்டும் என கவர்னரிடம் கூறியுள்ளோம் என்றார்.

சமீபத்தில் தேசிய தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ம.வெங்கடேசன் சாக்கடையில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் இறங்கி சுத்தம் செய்யும் வீடியோவை பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கம்யூனிஸ்ட் எம்.பி கள்ள மெளனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இவர் மீது அளித்த புகாரின் பேரில் வெட்கமில்லாத திராவிட மாடல் அரசு கைது செய்திருந்ததும், பின் சட்டப்போராட்டத்திற்கு பின் விடுதலை ஆனதும் குறிப்பிடதக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top