சி.எஸ்.ஐ பிஷப்க்கு அடி, உதை: தி.மு.க. எம்.பி மீது 5 பிரிவுகளில் வழக்கு

திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல அலுவலகத்தில் பிஷப் தாக்கியது தொடர்பாக போலீசார் திமுக எம்.பி ஞானதிரவியம் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக தலைமையும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பிஷப் ஆக இருக்கும் பர்னபாஸ் மற்றும் லே செயலர் ஜெயசிங் ஆகியோர் கருத்து வேறுபாடுகளால் இரு அணிகளாக செயல்படுகின்றனர்.  இந்த இரு தரப்பினருக்கும் ஆதரவாக பல குருமார்கள், திருமண்டல நிர்வாகிகள் உள்ளனர். திருநெல்வேலி திமுக – எம்.பி ஞான திரவியம், லே செயலர் ஜெயசிங் என்பவரின் ஆதரவாளர் ஆவார்.

இதற்கு முன் இருந்த பிஷப் காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும்படி, தற்போதைய பிஷப்புக்கு ஒரு தரப்பினர் நெருக்கடி கொடுத்த நிலையில், இதற்கு மறுத்த பிஷப் பர்னபாஸ், தனக்கு எதிராக செயல்படுவோரை, பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

அதன்படி, திருமண்டல கல்வி நிலவரக் குழு செயலாளராகவும், பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராகவும் இருந்த தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்தை, அப்பதவிகளில் இருந்து நீக்கி விட்டார்.

இதை தொடர்ந்து ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளராக, தி.மு.க., வழக்கறிஞர் அருள்மாணிக்கம் நியமிக்கப்பட்டார். இதனால், டயோசீஸ் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள்  கடந்த 25ம் தேதி அலுவலக அறைக்கு பூட்டு போட்டு விட்டனர்.

காட்ப்ரே நோபுள், சி.எஸ்.ஐ., உறுப்பினராக இருந்தாலும், ஜே.எஸ்.எம்., என்னும் தனி திருச்சபையின் பிஷப் ஆக செயல்படுகிறார்.  ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதையும், வாடிக்கையாக்கி கொள்பவர்.   நாலுமாவடி மோகன் சி லாசரசின் சகலை என்பதும் குறிப்பிடதக்கது.

சமீபத்தில், காட்ப்ரே நோபுள், திமுக – எம்.பி. ஞான திரவியத்தை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், எம்.பி., மீது திமுக, தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஞான திரவியம் ஆதரவாளர்கள் கடந்த 26.06.2023 அன்று காலை சி.எஸ்.ஐ அலுவலகத்திற்கு வந்த காட்ப்ரே நோபிளை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.  கிழிந்த சட்டையுடன் சென்று போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பெரில், திமுக எம்.பி., ஞான திரவியம், லே செயலர் ஜெயசிங்,  மண்டல பொருளாளர் மனோகர், வக்கீல் ஜான், மைக்கேல் உள்ளிட்ட, 10 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

எம்.பி., ஞான திரவியம், தன் மீதான வழக்கில் முன்ஜாமின் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கும்பலால் தாக்கப்பட்ட பிஷப் காட்ப்ரே நோபுள் வெளியிட்ட வீடியோ மற்றும் புகாரின் அடிப்படையில் தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், ஞான திரவியத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஞானதிரவியத்தை கைது செய்ய வேண்டும் என, தென் மாவட்ட கிறிஸ்துவ திருச்சபைகளை சேர்ந்த பாதிரியார்களும், கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகளும், போர்க்கொடி துாக்கி உள்ளனர்.  பாதிரியார் பிஷப் காட்ப்ரே நோபிள், முதல்வர் ஸ்டாலினிடம், ஞானதிரவியம் மீது கடும் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளார்.  ‘கிறிஸ்துவ திருமண்டல அலுவலகங்களை ரவுடிகள் துணையுடன் பூட்டு போட்ட ஞான திரவியத்தை கைது செய்ய வேண்டும், தி.மு.க என்றாலே ரவுடியிசம் தானே…’அங்குள்ள கிறிஸ்துவ மக்களும் தானே, அவருக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தனர்; வரும் லோக்சபா தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்’ என, கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் திமுக மீது தங்களது ஆதங்கங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன், கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் என்பவருக்கு நிறுவனத்தில் பணி புரிந்த கோவிந்த ராஜ் மரணமடைந்த வழக்கில் திமுக எம்.பி கைது செய்யப்பட்டார். இதை போல் திமுக எம்.பி ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்குமா திராவிட மாடல் அரசு?

இதற்கு முன் திருநெல்வேலி பாஜக நிர்வாகி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியது.  புகாரும் உள்ள நிலையில் மேலும், மதபோதகரை தாக்கியது, ஞானதிரவியத்தின் ரெளடியிசம் அளவுக்கு மீறி செல்வதால் தான் சமீபத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்னும் போது சிறுபான்மையினர் மீது கைவைத்தால் திமுக அரசு சும்மா இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

************

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top