மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ. இடமாற்றம் – சர்வாதிகாரியாக மாறிய திராவிட மாடல்அதிகாரிகள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் பணிபுரிந்த துணை காவல்ஆய்வாளர் ஈஸ்வரன் தனது பணியை நேர்மையாக செய்த காரணத்திற்காக அவசர அவசரமாக தஞ்சாவூர்ஆயுதப்படைக்கு பணி மாற்றப்பட்டுள்ளார் இந்த திராவிட மாடல் ஆட்சியில் என்பதை படிக்கும் போதுஆச்சரியம் இல்லைதானே.கோவில்களின் நகரம் கும்பகோணம், அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் திருவாரூர் செல்லும் பாதையில்அமைந்துள்ளது நாச்சியார்கோயில். இந்த ஊரின் பிரதான தொழிலாக இருப்பது பித்தளை குத்துவிளக்கு.இங்கு தயாரிக்கப்படும் குத்து விளக்கு இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகிறது. இதே ஊரில்தான் 108 வைணவத்தலங்களில் ஒன்றான ஸ்ரீநிவாச சமேத வஞ்சுளவல்லித்தாயார் இருக்கும் கோவிலும் உள்ளது நாச்சியார் கோயில் எனப்படும். இதுவே, இந்த ஊரின் தனிச்சிறப்பு.

108 வைணவத்தலத்தில், திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் பாடப்பெற்ற 14 வது திவ்ய தேசமாகஇந்த நாச்சியார்கோயில் அமைந்துள்ளது. கல் கருடன் அமைந்துள்ளதும் இந்த கோவிலில்தான் என்பதுமற்றுமொரு சிறப்பு.சுற்றுலாப்பயணிகள் கணிசமாக வந்துபோகும் இந்த ஊரில் குப்பைகளை சரிவர அகற்றுவது இல்லைஎன்பதும், திருக்கோவிலைச் சுற்றியுள்ள மணிமுத்தா நதி என்று அழைக்கப்படும்

குளத்தினையும்தூய்மையாக பராமரிப்பதில்லை என்பதும் ஊர்மக்களின் பெரும் கவலையாகும்.சரி விஷயத்திற்கு வருவோம்…….இந்த ஊரில் கடந்த பல வருடங்களாகவே தனிப்பட்ட முறையில் சில பழிவாங்கும் கொலைகள் அரங்கேறிவருகிறது . மது, கஞ்சா போன்ற போதைப் பழக்கமும் குறைவில்லாமல் நிறைந்துள்ளது மக்களிடையேபெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தனது பரிவாரங்களோடு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது,
நாச்சியார் கோவிலை அடுத்த வண்டுவாஞ்சேரி கிராமத்தில் இரட்டை வாய்க்காலில் இருந்து 5 யூனிட்
சவுட்டு மணலை நிறைத்துக்கொண்டு லாரி ஒன்று அங்கிருந்து கிளம்ப இருந்த வேளையில் உதவி
ஆய்வாளர் ஈஸ்வரன் அந்த வண்டியின் ஓட்டுனரையும், உதவியாளரையும் பிடித்து மணல் அள்ளியதற்கான
அனுமதியை கேட்டுள்ளார். அந்த இருவரும் திருதிருவென்று முழிக்கவே இது சட்ட விரோத கும்பல் என்று
உணர்ந்து அந்த லாரியை முடக்கி நாச்சியார்கோயில் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார்.
லாரியின் உரிமையாளர் யார் என்று விசாரிக்கும்போது அவர் பக்கத்து கிராமமான மாத்தூர் கிராமத்தின்
அதிமுக துணை பஞ்சாயத்து தலைவரும், தஞ்சை மாவட்ட சிறுபான்மை பிரிவின் துணைச் செயலாளருமான
A. U. சார்லஸ் என்பது தெரியவந்தும், மூவரையும் கைது செய்தார் அந்த நேர்மையான அதிகாரி ஈஸ்வரன்.
சட்டப்படி வழக்குப்பதிய காவல் ஆய்வாளருக்கு புகார் தேவை. அதற்காக, பொறுப்பு கிராம நிர்வாக
அதிகாரியாகவுள்ள சங்கர் என்பவரை தொடர்புகொண்டு எழுத்துப்பூர்வ புகார் அளிக்க உதவி ஆய்வாளர்
கோரியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர் பதிலேதும் கூறாமல் நழுவியுள்ளார்.
கிராம நிர்வாக அதிகாரி நழுவியதை புரிந்துகொண்ட காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் இதில் பெரும் புள்ளிகள்
ஈடுபட்டிருப்பதை அப்போதுதான் புரிந்துகொண்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் ஈஸ்வரன், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனை தொடர்பு கொண்டு
நிலைமையை எடுத்துச்சொல்லி அவரை புகார் அளிக்க கேட்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் தாசில்தார் “
நீதான வண்டிய புடிச்ச,நீயே கேஸ் போட்டுக்கோ” னு அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அப்போதும்
நேர்மை குறையாத அந்த உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் ” நீங்க சொன்னத எழுதிக்கொடுங்க” என்று கேட்க
கோபமான தாசில்தார் ” உங்க இன்ஸ்பெக்டர் கிட்ட எல்லாம் பேசியாச்சு என்று மிரட்டும் தொணியில் பதில்
கூறியுள்ளார்.
அதன்பின்னர், என்ன செய்வது என்று யோசித்த ஈஸ்வரன், கும்பகோணம் கோட்டாச்சியர் பூர்ணிமாவை
தொடர்புகொண்டு அவரை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளார். எல்லாவற்றையும்
பொறுமையாக கேட்ட கோட்டாச்சியர் ” நான் பார்க்கிறேன்” என்று ஒற்றை வரியில் முடித்தார்.
கோட்டாச்சிச்சியரின் அழைப்புக்காக காத்திருந்து ஆறு மணி நேரம் கழிந்த நிலையில், எந்த அழைப்பும்
அவரிடமிருந்து உதவி ஆய்வாளர் ஈஸ்வரனுக்கு வரவில்லை.
இதனிடையில், யாரோ கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பொறுப்பு வி.ஏ.ஓ சங்கர் வந்து பெயர் எதுவும்
குறிப்பிடாமல் ஒரு வெற்று புகாரை பெயரளவில் கொடுத்து சென்றிருக்கிறார்.
வழக்கின் தன்மை நீர்த்துப்போகும் என்பதை உணர்ந்து என்ன செய்வதென்று தவித்த ஈஸ்வரன்,மீண்டும்
கோட்டாச்சியர் பூர்ணிமாவை தொடர்புகொண்டுள்ளார். இந்தமுறை கூடுதலாகவே பேசிய அதிகாரி
பூர்ணிமா ” நான் என்ன செய்யனு இப்போ” உங்க டி. எஸ். பி கிட்ட பேசியாச்சு. நீங்க அவர் கிட்ட பேசிங்க”
என அவரின் அதிகாரத்தை காட்டியுள்ளார்.
ஒத்துழைப்பு கொடுக்க முடியாத இந்த அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த மணல் திருடிய சமூக
விரோதியை காப்பாற்ற காவல் ஆய்வாளர் ஈஸ்வரனை தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு அவசர அவசரமாக
பணி மாற்றம் செய்ய உதவியுள்ளனர்.
பட்டப்பகலில் மண் அள்ளியவர்கள் மீது புகார் அளித்த தூத்துக்குடி வி.ஏ.ஓ அலுவலகத்திலேயே
படுகொலை செய்யப்பட்டது இந்த திராவிட மாடல் ஆட்சியில் என்பதை யாரும் மறக்கவில்லை.
எஸ். ஐ ஈஸ்வரன் மாற்றப்பட்டதும், சமூக விரோதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தலைமைச் செயலகத்தில்
வல்லமையோடு உள்ள இந்த தொகுதியின் அரசியல் ஆளுமையைச் சந்தித்து சால்வை அணிவித்து தங்களது
தொழில் தடைபெறாமல் நடக்க உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியில் மணல் எடுக்க அரசு 3 மாவட்டங்களில் 12 இடங்களில்
அனுமதித்துள்ள நிலையில், உள்ளூர் அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் கைகோர்த்து மணலை
கொள்ளை அடித்து காசு பார்ப்பது தெரிந்தும் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு ஆதவராக இருப்பது
மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் குடும்பத்தை விமர்சித்தால், இந்த ஆட்சியை எதிர்த்து கருத்து பகிர்ந்தால் , மணல் கொள்ளையைத்
தடுத்தால் அவர்கள் மீது அல்லாம் ” சர்வாதிகாரியாக மாறி” நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் சொன்ன “நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று சொன்னதை
திராவிட மாடல் அதிகாரிகளும், கட்சியினரும் சரியாகத்தான் புரிந்துகொண்டுள்ளார்கள்.
அப்பாவி மக்கள்தான், திமுக தேர்தல் வாக்குறுதியைப்போல் இதையும் நம்பிவிட்டார்கள்.

-ஆதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top