கானல் நீராகும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிஇது போட்டோ ஷூட் கூட்டம்

 அதைத் தவிர இக் கூட்டத்தால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் அமித்ஷா.
இவர்கள் மோடியால் இணையவில்லை, ஈ டி யால் ( ED – அமலாக்கத்துறை) இணைந்திருக்கிறார்கள், என்று எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை ஏற்கனவே விமர்சித்திருக்கிறார் மோடி.
” நீ இதுக்கு லாயக்கி பட மாட்ட ”  என்று சொல்லாமல் சொல்லிய லாலு, உங்கள் திருமணத்திற்கு நாங்கள் எல்லாம் வர வேண்டும் என்று ராகுலுக்கு  கோரிக்கை விடுத்திருக்கிறார். உங்கள் பிரதமர் பதவிப் பிரமாணத்திற்கு நாங்கள் வரவேண்டும் என்று அவர் சொல்லவில்லை.  
கடந்த ஜூன் 23 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரால் நடத்தப்பட்ட பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் இப்படித் தான் வருகின்றன.
பிஜூ பட் நாயக், சந்திரசேகர் ராவ், மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கின்றன. டெல்லியில் அதிகாரிகள் மீது மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்காமல் இருப்பது, ஆம் ஆத்மியின் கோபத்தைத் தூண்டி இருக்கிறது. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்காத பட்சத்தில் அடுத்த கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்வது இயலாதது என்று தெரிவித்திருக்கிறது ஆம் ஆத்மி.
உத்தர பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை. ஹரியானாவில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க, இந்திய தேசிய லோக்தளம் விரும்பவில்லை.
தமிழக ஆளும் கட்சி திமுகவின் இந்தி விரோதம்,  வடக்கன் விமர்சனங்கள், பிஹாரி விமர்சனங்கள் அம்மாநில மக்களால் சிறு விஷயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு நிதிஷ் வரவில்லை. இந்தக் கூட்டத்திற்குச் சென்ற ஸ்டாலின், எதிர்க் கட்சிகளின் இணைந்த பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து விட்டார். காரணம், பிஹாரிகளைப் பற்றிய கேள்விகள் தன்மீது பாயும் என்ற அச்சம்!  
அரவிந்த் கெஜ்ரிவாலும் பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்து விட்டார்.
மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கோரிக்கை, காங்கிரசுக்கு சங்கு ஊதுவதாகவே இருக்கும். மாநிலக் கட்சிகளின் வாக்குகள், அந்தந்த மாநிலத்தோடு நின்று விடுபவை என்பதால் அவற்றின் வாக்குகள் மாநிலம் தாண்டி, எங்குமே காங்கிரசுக்குப் போகப் போவதில்லை. எனவே விட்டுக் கொடுக்கும் ரிஸ்கை காங்கிரஸ் கட்சி விரும்பாது.
மோடி எதிர்ப்பு என்பதைத் தவிர இந்தக் கூட்டணிக்கு, இந்தியாவுக்கு என்று சொல்ல எந்த வலுவான செய்தியும் இல்லை. இவர்களால் ஒரு பிரதமர் வேட்பாளரைக் கூட முன் நிறுத்த இயலவில்லை.
இந்நிலையில் மோடிக்கும் அடையாளம் காட்ட முடியாத ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்குமான போட்டியாகத் தான் 2024 தேர்தல் வாக்காளர்களால் பார்க்கப்படும்.
எனவே, வாக்காளர்களின் தெளிவான தேர்வு மோடியாக மட்டுமே இருக்கும்!
எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை என்பது கானல் நீராகப் போய்விடும் !

-நானா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top