நேபாள் நாட்டிற்கு ஊடுருவி அங்கிருந்து இந்திய நாட்டின் பீகார் மாநிலத்திற்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு சீன இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதாவது இந்தியாவின் எல்லையில் ஊடுருவது மற்றும் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை உளவு பார்க்க சட்டவிரோதமாக பயன்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறது.
அதே போன்று தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நேபாள் நாட்டின் வழியாக பீகார் மாநிலத்திற்கு நுழைய முயன்ற ஜாகோ ஜிங் மற்றும் பு காங் என இரண்டு இளைஞர்கள் மீது, ஹரியா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சீனாவின் ஜாக்சிங் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இருவரும் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைய முயன்றுள்ளனர். அதிகாரிகள் அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் நேபாள் வழியாக இரண்டாவது முறையாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்று குடியேற்ற அதிகாரிகள் கூறியுள்ளனர்.
– வ.தங்கவேல்