செக் குடியரசு நாட்டில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. கலப்பு அணிகளுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, ராகேஷ் குமார் ஜோடி, பிரேசில் நாட்டை சேர்ந்த ஜேன் கர்லா, பெரைய்ரா ஜோடியை சந்தித்தது.
முதல் இரண்டு செட்டில் இந்திய ஜோடி 74&73 என முந்தியது. தொடர்ந்து அசத்திய இந்திய ஜோடி 113&111 என ஆனது. கடைசி செட்டிலும் கலக்கிய இந்திய ஜோடி 152&146 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
தனிநபர் காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, துருக்கியின் ஆஸ்னூர் கியூர் மோதினர். முதல் செட்டில் 29&27 என முன்னிலை பெற்ற ஷீத்தல் அடுத்தடுத்த செட்டில் ஏமாற்றினர். முடிவின் போது 138&140 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். பெண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சரிதா, ஜோதி ஜோடி, ஈரானின் அஸ்காரி, யவர்பூவர் ஜோடியை எதிர் கொண்டது.
இதில் இந்திய ஜோடி 147&142 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தியது. தனிநபர் காம்பவுண்டு ஓபன் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சரிதா, 139&142 என பிரேசிலின் ஜேன் கர்லாவிடம் தோல்வியை சந்தித்தார்.