தமிழகத்தில் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் சுவாமி திருக்கோவில் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர்.
அதே நேரத்தில் கார்த்திகை தீபம் அன்று பல லட்சக்கணக்கானோர் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் ஆசி பெற்று செல்வர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்த்து குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய வைப்பதாக பக்தர்களிடம் அங்குள்ள சில இடைத்தரகர்கள் ஈடுபடுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது தொடர்கதையாக இருக்கிறது.
இதன் காரணமாக கட்டணம் செலுத்தி வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அறநிலையத்துறையை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை முறையாக பராமரிக்காமல் உண்டியல் பணத்தை மட்டும் வாரி செல்கின்றனர். ஆனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்துக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் எழுப்பி வருகின்றனர்.
அதே போன்று தற்போது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் இந்த சமூக அறநிலையத்துறை சார்பில் கட்டண தரிசனத்திற்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கோவில் நிர்வாகம் சுவாமி காணிக்கை வரவு என பக்தர் ஒருவருக்கு ரூ.500 வீதம் வசூலிக்கப்படுகிறது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி ரூ.500 வசூலிக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் இது ஒரு பகல் கொள்ளையாகவே பார்க்கப்படுகிறது. இந்து சமூக அறநிலையத்துறையை ஒழித்தால் மட்டுமே பக்தர்கள் அனைவரும் நிம்மதியான முறையில் சாமி தரிசனம் செய்வார்கள் என்பது மாற்றுக்கருத்தில்லை.
-வ.தங்கவேல்