பிரதமர் மோடிக்கு விருது.. சரத் பவார் பங்கேற்பு.. உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அதிர்ச்சி!

பிரதமர் மோடிக்கு விருது.. சரத் பவார் பங்கேற்பு.. உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அதிர்ச்சி!

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடிக்கு திலக் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரத்பவார் பங்கேற்ற நிலையில் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ளது.

சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார். லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கரஸ் தலைவருமான சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிரதமருடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார்.

இந்த விழாவில் சரத் பவார் கலந்து கொள்ள வேண்டாம் என்று உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. தற்போது மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பையும் மீறி சரத்பவார் இந்த விழாவில் பங்கேற்றார். இதனால் அவர் மீது காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அதிருப்தியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top