ஞானவாபி (மசூதி) கோவிலை ஆய்வு செய்வதற்கு இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியது. இதனால் அங்கு மசூதி இருந்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வுகளை தொடங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக நீதி மன்றத்தில் நடந்த விவாதம் சுவாரஸ்யமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஞானவாபி கோவிலை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரப்பிரதேச உயர் நீதிமன்றம் கொடுத்த அனுமதிக்கு தடை விதிக்ககோரி உச்ச நீதிமன்றம் சென்ற வக்கீல் அஹ்மாதி உருண்டு புரள, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அதற்கு இசைவதாக இல்லை.
உடனே அஹ்மாதி, ‘‘இதற்கு தடை விதிக்க வேண்டும். நாளை வேறொருவர் வந்து அல்பமாக ஒரு மனு போட்டு கீழே ஏதாவது இருக்கிறது, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டால் அதை அனுமதிப்பீர்களா?’’ என்று கேட்க…
பதிலுக்கு தலைமை நீதிபதி, ‘‘அயோத்தி விவகாரத்திலும் ஆய்வு செய்த பிறகே தீர்ப்பு கொடுத்தோம். இதிலும் அப்படித்தான் செய்வோம். உங்களுக்கு அல்பமாகப் படலாம். ஆனால் மற்றவர்களுக்கு அது (இறை) நம்பிக்கை சார்ந்த விஷயம். அதை எப்படி அல்பம் எனலாம்?’’ என்றார். இதனால் அந்தத் தரப்பு நிலை குலைந்தது.
ஆய்வு செய்வதற்கு தடை விதிக்காததால், ஆய்வு தற்போது தொடர்கிறது. சமீபத்தில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், ஞானவாபி பற்றிய கேள்விக்கு, ‘‘அதன் சுவர்களை பார்த்தாலே தெரியும் அது மசூதியா, கோவிலா என்று. எந்த மசூதியில் விக்ரஹங்கள் உள்ளன? எந்த மசூதியில் சிவனின் சூலம் உள்ளது? அந்த மார்க்கத்தினர் தாமே முன் வந்து கொடுக்க வேண்டிய விஷயம் இது’’ என்றார்.
ஆக… விரைவில் ஞானவாபி சிவனுக்காக காத்திருக்கும் நந்திக்கு சிவபெருமான் காட்சி தருவார் என்று தெரிகிறது.