‘பிரதம மந்திரி’ கல்வி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த 3,904 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமான ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https;//yet.nta.ac.in என்ற இணையளத்தில் பட்டியல் இடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

தேசிய தேர்வு முகமையான PM-YASAVI நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்படும். கணினி வழியாக தேர்வு செப்டம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளது. இத்திட்டம் தொடர்பான முழு விவரங்கள் https;//yet.nta.ac.in, https;//socialjustice.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top