என் மண் என் மக்கள் நடைப் பயணம் சென்று கொண்டிருக்கும் அண்ணாமலை அவர்கள் மதுரை வடக்கு தொகுதியில் ஆற்றிய உரை.
தயவு செய்து எனக்கு மாலை போடாதீர்கள், மதுரை வடக்கு தொகுதியில் 129 மாலை
போட்டுள்ளீர்கள். ஒரு மாலை 3000 ரூபாய் எவ்வளவு பணம் வீண்.? அந்தப் பணத்தில் இல்லாதவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள், அநாதை ஆஸ்ரமத்துக்கு உதவி செய்யுங்கள். யாத்திரையின் நோக்கம் மிகவும் புனிதமானது. எவ்வளவு போட்டோ வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அன்பான வேண்டுகோள். ஆடம்பரம் வேண்டாம், மாலை வேண்டாம், பொன்னாடைகள் வேண்டாம், எளிமையாக இருக்கட்டும். மக்களைப் பார்ப்பதற்கு அனுமதி அளியுங்கள். மக்கள் தங்களது பிரச்னைகளைக் கூறுகிறார்கள். மத்திய அரசில் இருப்பதால் உடனடியாக அதில் 20 % யாவது நம்மால் தீர்த்து வைக்க முடியும்.
முன்பு பல யாத்திரைகளைப் பார்த்திருக்கிறோம். இது அப்படியல்ல. தினமும் காலையில் 6 கிமி மாலையில் 6 கிமி நடந்து சென்று மக்களை சந்திக்கிறோம்.
.
மோடி அய்யா அவர்கள் கடந்த 9 ஆண்டுகளில் மக்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைச் சொல்கிறோம். ஒன்பது ஆண்டுகளிலும் 10 லட்சத்து 76,000 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழகத்துக்கு
வழங்கியுள்ளது. வீடுகளுக்குக் கழிப்பறைகள் கட்டித் தந்திருக்கிறோம், வீடில்லாதவர்களுக்கு வீடு அளிக்கிறோம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்குகிறோம்..5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்குகிறோம்.
ஊழலில்லாத ஆட்சி நமது மோடி அவர்களின் ஆட்சி..
.
2014ல் ஒரு இந்தியனின் சராசரி வருமானம் 86,000 ரூபாய் இப்போது 1 லட்சத்து 92000 ரூபாய். அதனால்தான் உலகின் 11 ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த நாம் இன்று 5 ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம்.. .இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் 3 ஆவது இடத்தை அடைந்து விடுவோம்.
2014 வரை இந்தியா என்றால் ஊழல் மிகுந்த நாடு என்று உலகம் கூறியது. இன்று வேகமாக வளரும் நாடு, உறுதியான அரசு உள்ள நாடு, எல்லாவற்றுக்கும் மேலாக நரேந்திர மோடி அவர்கள் உள்ள நாடு என்கிறது..
திமுக ஆட்சியைப் பற்றிக் கூறுவதென்றால் கரப்ஷன், கமிஷன் ,கலெக்ஷன், ( ஊழல் , கட்டிங்,
அடாவடி வசூல்)என்று கூறலாம். மகன் உதயநிதி மருமகன் சபரீசன் வரை அனைவரும் எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று யோசிக்கின்றனர்.
முதல்வரின் குடும்பம் ஊழல் செய்வதர்காக ஒரு அரசு
மதுரை ஒரு தூங்கா நகர்.
ஆனால் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் எம்பி எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்.
2026 எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்து விடும்.
மதுரை வளர வேண்டுமென்றால் பிரதமர் மோடி அவரகள் மீண்டும் பிரதமராக வேண்டும்.
வேறு எந்த மருத்துவ மனைக்குமில்லாத அளவில் மதுரை எம்ஸ் மருத்துவமனைக்கு 2600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற எம்ஸ்களுக்கு 600 கோடி தான்..
5 முறை ஆண்ட திமுக ஒரு எய்ம்ஸ கொண்டு வரவில்லை.
ஆனால் இன்று பாஜக அதைக் கொண்டு வரும் போது ஏதாவது நொட்டு சொல்லிக்
கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் டெட் DET தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வேலை தர வேண்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். வேலை கொடுத்தாலும் சம்பளம் வழங்க தமிழக அரசிடம் பணம் இல்லை.. இதில் என்ன நெம்பர் ஒன் மாநிலம்?
மாநிலத்தின் கடன் 7 லட்சத்து 53000 கோடி ரூபாய் கடன்.
ஒரு குடும்பத்தின் தலையில் உள்ள கடன் 3 லட்சத்து 52000 ரூபாய்.
இந்தியாவிலேயே அதிகமாகக் கடன் வாங்கிய மாநிலம் , அதிகமாக் குடிப்பவர்கள் உள்ள மாநிலம், அதிகமாக லஞ்சம் வாங்கும் மாநிலம் த்ராவிட மாடல் திமுக ஆளும் தமிழகம்.
ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளில் 3,50,000 பேருக்கு வேலை கொடுப்போம் என்று திமுக உறுதி அளித்தது. இது வரை 1,50,000 பேருக்குக் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் தரவில்லை.
ஸ்டாலின் மகனும் மருமகனும் சேர்ந்து இரண்டாண்டுகளில் கொள்ளையடித்த பணம் 30000 கோடி ரூபாய் என்று மதுரையைச் சேர்ந்த திமுக அமைச்சர் பிடி ஆர் தியாகராஜன் கூறினார். அந்த ஒலி நாடாவை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இன்று குள்ள நரிகளெல்லாம் சேர்ந்து ஊளை இடுகின்றனர். இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து மோடி அவர்களை மீண்டும் பிரதமராக அவரை விட மாட்டோம் என்று பேசுகின்றனர். இவர்கள் யார்? யாரெல்லாம் குடும்ப அரசியல் செய்கிறார்களோ, யார் மீதெல்லாம் ஊழல் வழக்கு உள்ளதோ , ஊழல் குற்றச் சாட்டு உள்ளதோ அவர்களெல்லாம் தான் இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் உள்ளனர். எங்களது பிரதமர் வேட்பாளர் உலகம் போற்றும் உத்தமர் நரேந்திர மோடி. உங்களது பிரதமர் யார் ?
இவர்களெல்லாம் சேர்ந்து கொண்டு ஒரு கூட்டணி என்று பேசிக் கொண்டுள்ளனர்.
2004 இலிருந்து 14 வரை இந்தியா எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும் என்பது இவர்களது ஆசை. காமன்வெல்த் விளையாட்டில் கழிப்பறையில் உபயோகிக்கும் காகிதத்தில் ஊழல் செய்தனர்..
நாட்டில் எதையுமே விட்டு வைக்கவில்லை.. மரத்திலிருந்து, செடியிலிருந்து , கல்லிலிருந்து தண்ணீரிலிருந்து காற்றிலிருந்து அனைத்திலும் ஊழல் செய்து விட்டு பத்து ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு
இப்போது மீண்டும் வந்துள்ளார்.
ஆகவே மதுரை மக்கள் பாஜக மற்றும் கூட்டணிக்கு கட்சிகளுக்கு வாக்களித்து மீண்டும் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக உதவி செய்ய வேண்டும். 400 எம்பிக்களுக்கு மேல் பெற்று மோடி அவர்கள் மீண்டும் பிரதமாராவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த 400ல் நாம் 40ஐ க் கொடுக்க வேண்டும் என்பதுதான் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நோக்கம்.
இன்று மதுரையில் வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது. ஆகவே தொழில் நுட்பப் பூங்கா, ஐடி பூங்கா போன்றவற்றை கொண்டு வருவோம்..அதுபோல் தொலை நோக்குப் பார்வை வேண்டும். திட்டமிடல் வேண்டும். கோயம்புத்தூர், சென்னை போல பிற நகரங்களும் வளர்ந்தால் மதுரையும் வளரும். மதுரை தொழில்துறையில் முன்னேற வேண்டும். அதற்கு உங்களது ஆதரவு வேண்டும்.
எங்கெல்லாம் நமது யாத்திரை செல்கிறதோ அங்கெல்லாம் முத்துக்குமார் தலைமையில் 21 பேர் அந்தந்த இடத்தை தூய்மைப்படுத்திக் கொண்டுள்ளனர்.. அவர்களுக்கு நன்றி.
நீங்களும் ஒத்துழையுங்கள். உங்களுக்கு நன்றி.
பாரத் மாதா கி ஜெய்! பாரத அன்னையின் புகழ் ஓங்குக!