முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க.,வினருக்கு, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவிதை நடையில் பதிலடி கொடுத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
பெண்ணினமே எழுவாய்…
அதிகம் அரசியலுக்கு வருவாய்… சுதந்திரம் அடைந்து,
75 ஆண்டுகளை கடந்து விட்டோம் என, கொண்டாடும் வேளையில் பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது என, அட்டகாசமாய் ஆர்ப்பரிப்போம்.
ஆம்… ஆள்பவர்களில் பெண்கள் இருக்கிறார்கள். …
கவர்னராகவும் பெண்கள் இருக்கிறோம்…
நீதித்துறையில் பெண்கள் இருக்கிறார்கள்… நிதியமைச்சராகவும் பெண்ணே இருக்கிறார்…
ராணுவத்தில் பெண்கள் இருக்கிறார்கள்…
பலர் ஆணவத்தை அழித்து, ஆளுமையில் பெண்கள் இருக்கிறார்கள்.
ஆம்… வலிமை பெற்று வருகிறோம்.
ஆனால், வலிகள் போக்கி வாழ்கிறோமா?
சில ஆண்டுகளுக்கு முன், தமிழக சட்டசபையில், சட்டங்கள் ஆள வந்த பெண் தலைமை தாக்கப்பட்டார். அரசியலில் சிங்கமாய் நின்ற பெண் தலைவர் அசிங்கப்படுத்தப்பட்டார், தாக்கப்பட்டார்.
பெண் உரிமை பேசும் நாட்டில் பெண் துகில் உரிக்கவும் முயற்சிகள் நடந்தன.
ஆக, இதுபோலக் கொடுமையான நிகழ்வுகள் நடக்கக்கூடாது என, எண்ணலாம். ஆனால், இதுபோல நிகழ்வே நடக்கவில்லை என, சொல்லலாமா?
இந்தக் கொடுமையை பார்லியில் சொன்னது, நம் தமிழ் பெண் நிதியமைச்சர்…
இந்த பாரத தேசத்தின் நிதியமைச்சராக ஒரு தமிழ்ப்பெண் என, பலரும் பெருமை கொள்கையில்…
சிவாவாக இருக்கும் ஒருவர் அவரை சிறுமைப்படுத்துகிறார்.
1991ல் லண்டனில் இருந்தவருக்கு என்ன தெரியும் என்கிறார்.
1991ல் சிறுவனாக இருந்தவரை வாரிசாக இருப்பதால், வாரி அணைத்து அமைச்சராக ஆக்கியுள்ளவர்கள் பேசுகிறார்கள்.
‘நேற்று அமைச்சரானவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ என, ஆணவத்துடன் கூறுகிறார் பாலுவான எம்.பி., நேற்று உதித்த மகனை அமைச்சராக்கி விட்டு, சற்று நேரத்தில் பெண் அமைச்சரை பரிகசிக்கிறார்கள்…
பெண்கள் முன்னேற்றுவதற்கே கழகம் என்பவர்கள்… பெண்களுக்கு களங்கம் தானே கற்பிக்கின்றனர்…
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.