தனியார் நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் சேராமலேயே வீட்டிலிருந்து படித்தே மாணவர் அறிவுநிதி என்பவர் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அதிலும் ஓட்டு அரசியலுக்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வு வந்தால் மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோய்விடும் என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஒருவிதமான பயத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இவர்களின் பொய்யான பிம்பத்தை உடைத்து பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த வகையில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள மாணவர் அறிவுநிதி எந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்துக்கும் செல்லாமல், வீட்டில் இருந்தே நீட் தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவர் கூறும்போது, எனது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் தங்கமணி ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள். 11ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே நீட் தேர்வுக்கு படித்து வந்தேன். 12ம் வகுப்பு தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால், எந்த தனியார் நீட் பயிற்சி மையத்துக்கும் செல்லாமல், வீட்டில் இருந்தே நீட் தேர்வுக்கு படித்து வந்தேன். இதற்காக ரூ.2 ஆயிரம் மதிப்பில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப் புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன். அரசு சார்பில் 4 நாட்கள் நடத்தப்பட்ட நீட் பயிற்சிக்கு சென்றேன். அத்துடன் இணையத்தில் உள்ள பாடங்களையும் படித்தேன். இதனால் நீட் தேர்வில் 348 மதிப்பெண்களை பெற்றேன். தற்போது எனக்கு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்றார்.
இந்த மாணவரை போன்று பல அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படித்து வருகின்றனர்.
ஆனால் தங்களது மருத்துவப் படிப்பு வியாபாரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும், நீட் எதிர்ப்புக்கு தற்கொலை அரசியலை கையில் எடுத்து இருக்கிறது ஆளும் திமுக. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதை ஏனோ திமுக மறந்து விட்டது!