புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார்.
இவருடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, உள்ளூர் எம்எல்ஏக்கள் ஜெயந்த சாரங்கி மற்றும் லலிதேந்து பித்யாதர் மொகபத்ரா ஆகியோர்களும் 30 நிமிடங்களுக்கு மேல் கோயிலுக்குள் இருந்தார்.
மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் ” மேரி மாதா மேரி தேஷ் ” ( என் தாய், என் தேசம் ) கலை சிற்பத்தையும் கண்டு மகிழ்ந்தார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் சஹீத் ஜெய் ராஜ்குருவின் பிறந்த இடத்திற்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 20வது தேசிய சிஏ மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.