3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி.. டைம்ஸ் நவ், இடிஜி கருத்துக் கணிப்பில் தகவல்!

இந்தியாவில் தற்போது தேர்தல் நடைபெற்றால் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்று டைம்ஸ் நவ், இடிஜி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து 3வது முறையாக பதவி வகிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுவார்.

மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்  தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைப்  பெற்று ஆட்சியைப்  பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் நாட்டின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்துள்ளது.

பொதுமக்களின் நலன்களை மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டு வந்ததால் மீண்டும் 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அந்த காலக்கட்டத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் நாடு முழுவதும் பரவியது. இதனை பிரதமர் திறமையாகக்  கையாண்டு நாட்டு மக்கள் அனைவரின் உயிரையும் பாதுகாத்தார்.

முதற் கட்டமாக ஊரடங்கு  பிறப்பித்தார். அதற்கு அடுத்து கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி ஒவ்வொரு குடிமக்களுக்கும் இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்தார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இலவசமாக தடுப்பூசியை வழங்கினார். இதனால் இந்தியர்களின் மதிப்பு உலகளவில் இரட்டிப்பாக உயர்ந்தது.

இதற்கிடையில் மீண்டும் அடுத்த ஆண்டு 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி டைம்ஸ் நவ், இடிஜி நடத்திய கருத்துக்கணிப்பில் நாட்டில் மீண்டும் தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 296 முதல் 326 வரையிலான இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 160 முதல் 190 வரையிலான இடங்களை பிடிக்கும் எனத்  தெரியவருகிறது. மீண்டும் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வரலாற்றில் இடம் பிடிப்பார் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top