கொஞ்சம் சிரிங்க.. ‘விக்ரம் லேண்டரை’ கியூட்டாக புகைப்படம் எடுத்த ‘பிரக்யான் ரோவர்’

கொஞ்சம் சிரிங்க என்று போட்டோகிராபர் போன்று விக்ரம் லேண்டரை மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து பிரக்யான் ரோவர் அசத்தியுள்ளது. இது பற்றிய புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் கடந்த (ஆகஸ்ட் 23) தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பள்ளம் மற்றும் மேடு உள்ளிட்ட தடைகளை கடந்து ஒய்யாரமாக நடை போடும் விக்ரம் (ரோவர்) நிலவில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதை கண்டறிந்து சரித்திர சாதனை படைத்தது.

இது பற்றி இஸ்ரோ நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்துள்ளது. இதுதவிர ஆக்சிஜன் இருப்பதையும் கண்டறிந்துள்ள விக்ரம் ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை தனது தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டது’ எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ கூறியிருப்பதாவது: சிரியுங்கள் தயவுசெய்து, இன்று காலை விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் எடுத்தது. ஆய்வுப்பயணத்தின் போது நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top