திமுக அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து செப்டம்பர் 25ல் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படம் மின்சாரக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செப்டம்பர் 25ல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு தொழில் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதாவது பீக் ஹவர் கட்டணங்கள் மற்றும் நிலையானக் கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்க விடுத்து வருகின்றன.
இந்த வேலை நிறுத்தத்தில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்துவது பற்றி முடிவெடுக்கும் முன்னர் தொழில்துறை பிரதிநிதிகளுடன் திமுக அரசு ஆலோசனை நடத்தவில்லை எனவும் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அதிக மின் கட்டணத்தால் தொழிற்சாலைகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறைந்த ஆர்டர் அளவு மற்றும் தொழிலாளர் பிரச்னையால் ஆடைத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பீக் ஹவர் கட்டணம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 மணி வரை இரண்டு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. இரவு 10 மணி வரை மற்றும் நிலையான கட்டணங்கள் சிறு தொழில்களை முடக்குகின்றன.
மற்றொரு தொழிலதிபர் பெயர் சொல்ல விரும்பாதவர் அளித்துள்ள பேட்டியில், நிலையான கட்டணங்கள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக நகரத்தின் பிரபலமான ஹெச்பி மோட்டார்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது என்றார்.
மின் கட்டண உயர்வுக்காக ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதால் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விடியா ஆட்சியில் சாமானியன் முதல் தொழிற்சாலை முதலாளிகள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற ஆட்சி அகற்றப்பட வேண்டியதே ஒரே தீர்வாகும்.