மருத்துவ மேற்படிப்பிற்கு நீட் தேர்வில் பூஜ்ய மதிப்பெண் எடுத்தவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்ற செய்தி வந்தவுடன் பல்வேறு கிண்டல், கேலிகளும் ஒலிக்கின்றன. இதில் விவரம் அறிந்தவர்கள் விஷமமாகவும், தெரியாதவர்கள் விவரம் இல்லாமலும் விமர்சிக்கின்றனர்.
சதவீதம், தரவரிசை இவைகளின் வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காடுகள் அலறுவதை பார்க்க முடிகிறது. சதவீதம் என்பது மாணவர் எடுத்த மார்க்கின் சதவீதம். எத்தனை பேர் எழுதினாலும் இது மாறாது. தரவரிசை என்பது தேர்வு எழுதியவர்களில் இவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது. இது இறங்கு வரிசையில் பார்க்கப்படும். உதாரணமாக 1,2,3 என தரிவரிசை கொடுக்கப்படும்.
சதவீதம் என்பது இவரின் கீழ் எத்தனை சதவிகிதம் பேர் உள்ளனர் என்பதை குறிக்கும். உதாரணமாக ஆயிரம் பேர் தேர்வு எழுதினர் என வைத்துக் கொள்வோம். ஒருவருடைய சதவிகிதம் 95 என்றால் இவரின் கீழ் 950 பேர் இருக்கின்றனர் எனத் தெரிய வரும்.
ஏறுவரிசை அதாவது 98,96,87,65 என கூடுதல் மதிப்பெண்ணில் இருந்து இறங்கு முகமாக எழுதப்படும். அவரின் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கையை மொத்த நபர்களின் எண்ணிக்கையால் வகுத்து வரும் எண்ணை 100ல் பெருக்கினால் வருவது சதவீதம் ஆகும்.
அதாவது ஏ 98, பி 96, சி 88, டி 80, ஈ 75, இதில் ‘ஏ’ன் சதவீதம் 4 ÷5×100= 80
பின் சதவீதம்
‘ஈ’ன் சதவீதம்
‘ஈ’ன் சதவீதம் 0 பூஜ்யம் மதிப்பெண் 75
பூஜ்ய சதவீதத்தை பூஜ்ய மதிப்பெண் என்பவர்களுக்கு தகுந்த இடம் எதுவெனறு நீங்களே யூகித்துவிட கொள்ளுங்கள்.
இது போன்ற குறைந்தபட்ச அறிவை உபயோகித்தாலே தெரியும். ஏன் மருத்துவ மேற்படிப்புகளில் 0 மதிப்பெண் இருந்தாலே போதுமானது என தெரிந்துக்கொள்ளலாம்.
ஆனால் இது பற்றி எந்தப் புரிதலும் இல்லாமால் ஸ்டாலின் இதனைக் குறை கூறியிருந்தார். அவரது அறிக்கையில்,
” நீட்டின் பலன் ஜீரோ என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நீட் கட்-ஆஃப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம் தேசிய ‘தகுதி’ மற்றும் நுழைவுத் தேர்வில் ‘தகுதி’ என்பது அர்த்தமற்றது என்பதை அவர்களே (மத்திய அரசு) ஏற்றுக்கொள்கிறார்கள். இங்கு மருத்துவப்படிப்பு என்பது, பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது மட்டுமே. மற்றபடி எந்த தகுதியும் தேவையில்லை. எனவே
நீட் தேர்வுக்கும், தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என ஸ்டாலின் மிகத் தெளிவான பொய் ஒன்றைக் கூறி இருந்தார்.
இதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை தக்க பதிலடி கொடுத்துள்ளார் ..
இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே உள்ளது.
எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்லும் முன்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம், கடந்த ஆண்டு எத்தனை இடம் காலியாக இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா என்றார். அதற்கு செய்தியாளர் எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். அதன் பின்னர் அண்ணாமலை பேச ஆரம்பித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே உள்ளது.
‘‘மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பில், மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்பதற்கு அர்த்தம் நீட் எழுதி இருந்தாலே போதும் என்பது தான். அவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.’’ ‘‘எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரம்பும்.
‘‘நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலிலும், அடுத்தடுத்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெறுவர். நீட் தேர்வு மதிப்பெண்ணிற்கு ஏற்ற வகையில், அவர்கள் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் சேர முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி போதுமானது என்பதால் தான் ஜீரோ பெர்சண்டைல் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர், முதல்வர் மகன் ஆகியோரை தத்தி, சின்ன தத்தி என்று ஏன் மக்கள் அழைக்கிறார்கள் என இப்போதாவது அவர்கள் புரிந்து கொண்டால் தமிழகம் பிழைக்கும்..!