பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பா.ஜ., மாநில அலுவலகமாக கமலாலயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேசத்திற்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணம் செய்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்கள்.
இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர் அவர். கட்சிக்கு கொள்கை வடித்துக் கொடுத்த பிதாமகர். அன்னாரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு கமலாலயத்தில் சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பொறுப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பல கலந்து கொண்டு தீனதயாள் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது புகழை போற்றினர்.