முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளில் தாஷ்கண்ட் நகரில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க இந்திய குழுவுக்குத் தலைமையேற்று அவர் தாஷ்கண்ட் சென்றுள்ளார். அங்கு முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் இன்று (அக்டோபர் 2) மரியாதை செலுத்தியது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியிருப்பதாவது:
‘‘நமது முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளில் உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் கௌரவத்தைப் பெற்றேன்.
தாஷ்கண்ட் நகரில் உயிர்நீத்த அந்த மகத்தான தலைவர் நமது நாட்டிற்கு வலுவான தலைமையை வழங்கினார். இதுவே பசுமைப் புரட்சிக்கும் பலம் வாய்ந்த இந்தியாவுக்கும் வழிவகுத்தது. இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.