2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் மோடியே பிரதமராக வருவார் என்றும் டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. தற்போது மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஹாட்சிக் சாதனையை பிரதமர் மோடி படைக்க இருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 543 இடங்களில், எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிகள் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ., தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அடுத்த ஆண்டு 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்றும், அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்றும் ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 297 முதல் 317 வரையிலான இடங்கள் தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இ.ண்.டி. கூட்டணிக்கு 165 முதல் 185 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆவார் என்பது மீண்டும் உறுதியுடன் தெரிவித்துள்ளது.