சேலம் மாவட்டம், அரசுக் கோட்டை பெண்கள் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததை கண்ட மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம்,
அரசுக் கோட்டை பெண்கள் பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிகள் முறையாக இல்லை என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக பல முறை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இதனால் மாணவிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகார் அளித்தால் மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதிகள் செய்து தரவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு உதயநிதியுடன் ஊர் சுற்றவே நேரம் சரியாக இருக்கிறது, பள்ளிக்கல்வித்துறையை எப்போது கவனிப்பார் என்று கேள்வி எழுப்புவது, ஏதோ வாக்காளர்கள் அல்ல பள்ளி மாணவ, மாணவியர்.
மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை என புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில்அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் உதயநிதியுடன் ஊர் சுற்றுவதையும் சமூக வலைத்தளத்தில் உதயநிதிக்கு ஆதரவாக கருத்தை பதிவிட்டு வருவதையும் மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளார் அன்பில் மகேஷ். இது போன்றவர்களின் கையில் பள்ளிக்கல்வித்துறை சிக்கித்தவித்து வருகிறது திராவிட மாடல் கேவலம்!