காஸா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில் இது வெறும் ஆரம்பம்தான். ஹமாஸ் பயங்கரவாதிகளை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களிடம் சூளுரைத்திருக்கிறார்.
தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘‘இது வெறும் ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரையில் இல்லாத அளவுக்கு மிக வலிமையுடன் முடித்து வைப்போம். காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுமையாக அழித்து ஒழிப்போம். இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு சர்வதேச அளவிலான ஆதரவு பெருகியுள்ளது.
நமது எதிரிகள் இப்போதுதான் விலை கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். என்ன நடக்கும் என்பதை என்னால் வெளிப்படையாகக் கூற முடியாது. ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் சொல்லிக் கொள்கிறேன். யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம். அளவற்ற சக்தியைக் கொண்டு எங்கள் எதிரிகளை எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறியிருக்கிறார்.