நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அரசு மருத்துவர்கள் விற்பனை செய்துள்ள அதிர்ச்சிகாரமான தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மூன்றாவது பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை இடைத்தரகர் வாயிலாக மகப்பேறு மருத்துவர் அனுராதா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர் அனுராதா, தரகர் லோகாம்பாள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோரிடம் பெண் குழந்தைக்கு 3,000 ரூபாய், ஆண் குழந்தைக்கு 5,000 ரூபாய் கொடுத்து வாங்கி, குழந்தை இல்லாத தம்பதியரிடம் விற்றுள்ளனர். அதன்படி சுமார் ஏழு குழந்தைகளை அக்கும்பல் விற்றுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
வெளியில் விற்கும்போது ஒரு குழந்தையை ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உடல் உறுப்புகளையும் விற்றுள்ளது இந்த கும்பல்.
சுகாதாரத்துறையை கவனிக்கும் அமைச்சர் சுப்பிரமணியன் ஓட்டப் பந்தயத்திற்கே தனது முழு நேரத்தையும் பயன்படுத்தி வருகிறார். குழந்தையை விற்று அரசு மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதை எங்கே காது கொடுத்து கேட்கப்போகிறார் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு புறம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு சென்றால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது? எனவே இப்போதாவது இந்த விடியாத அரசு, மருத்துவமனைகள் மீது கவனம் செலுத்தம் வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.