தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக் கடிதம் அனுப்பி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

பரமக்குடி, நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் வேதியியல் துறை ஆசிரியராக குடியரசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 15 அன்று ‘பரிக்சா கே சர்ச்சா’ இயக்கத்தில் மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சி பற்றிய கருத்துக்களை, ‘மை கவர்மெண்ட் வெப்சைட்’ வழியாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து சுதந்திர தினத்தின் அமிர்த காலத்தில் அடுத்து வரும் 25 ஆண்டு காலத்தில், ‘ஒவ்வொருவரின் கருத்துக்களை கையில் எடுப்போம்’, என்ற அடிப்படையில் இந்த வெப்சைட் செயல்பட்டது. இதில் இந்த ஆசிரியர் 12 கருத்துக்களை மாணவர்களின் நலனுக்காக அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இந்த ஆசிரியரை பாராட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட கடிதம் அனுப்பியுள்ளார்.

இது பற்றி ஆசிரியர் குடியரசன் கூறும்போது; மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ‘மாணவர்களுக்கு வீடும், பள்ளியும் ஒன்றுதான் என்ற மனநிலை கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு என்பது நமது திறமையை வெளிப்படுத்தும் இடமாகத் தான் கொள்ள வேண்டும். பிறர் முன்னிலையில் நம்மை மதிப்பிடுவது அல்ல. வெற்றியோ, தோல்வியோ இரண்டுமே மாறி, மாறி வருவது தான் வாழ்க்கை, என்ற எண்ணத்தை கொள்ள வேண்டும் என 12 கருத்துக்களை தெரிவித்து இருந்தேன். இதற்காக பிரதமரிடமிருந்து பாராட்டு கடிதம் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top