சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள கண்டன செய்தியில்:
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும், செயல் வன்முறைகளும் சமீப காலமாக அதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்தப் படுவது கவலை அளிக்கிறது இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கலவரத்தால் அல்ல… இதை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும். மேலும் ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டும். ஆளுநர் அலுவலக பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.