பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
முக்கியமான தமிழர்கள் கொண்டாட்ட நாட்களில் பிரதமர் தமிழில் வாழ்த்து தெரிவிப்பது தமிழக மக்களிடம் மிகுந்த வர வேற்பு பெற்றுள்ளது. ..அதிலும் குறிப்பாக தேவர் ஜெயந்தி வாழ்த்து பலரையும் பாராட்ட வைத்துள்ளது.