‘நாகா மலைவாழ்’ மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.பாரதி: ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

நாகாலாந்தில் உள்ள மலைவாழ் மக்கள் நாய்க்கறி சாப்பிடுவர் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் நேற்று முன்தினம் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

இங்கே உட்கார்ந்திருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செயல்படுகிறார். வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா; இவரை ஊரை விட்டு விரட்டி அடித்தனர்.

நாகாலாந்துகாரன் நாய்க்கறி சாப்பிடுவான்; நாய்க்கறி தின்கிறவனுக்கே இவ்வளவு சொரணை வந்து ஆளுநரை ஓட, ஓட விரட்டினான் என்றால் உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழனுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை அவர் மறந்து விடக்கூடாது. நாகாலாந்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியே அனுப்பி வைத்த போது தீபாவளி பண்டிகை போல அங்குள்ள மக்கள் கொண்டாடினர். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி திமிராக பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியின் தரக்குறைவாக பேசிய பேச்சை ஆளுநர் மாளிகை, எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நேற்று (நவம்பர் 5) பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:

நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என, பகிரங்கமாக இழிவுபடுத்தியது கேவலமானது; இதை ஏற்க முடியாது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என, பாரதியைவலியுறுத்துகிறேன். இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் வாய் கொழுப்பில் ஊறிப்போனவர்கள் என்பது தமிழக மக்களுக்கே தெரியும். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து பெரிச்சாளிகளை போல் பெருத்துள்ளனர். தமிழக மக்களின் நலனுக்காக ஆட்சி செய்யாமல் திமுக குடும்பத்திற்காக மட்டும் கொள்ளை அடிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் ஆளுநரை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top