போலி அடையாள அட்டை தயாரித்து வடமாநிலத்தவர்களை போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள வங்கதேசத்தினர் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசம், மியான்மார் நாடுகளில் ஆட்களை பணம் கொடுத்து வாங்கி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் தொழிலாளர்களாக ஊடுருவ வைத்தது தொடர்பாக மனித கடத்தல் என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அடுத்த படப்பையில் பழக்கடையில் திரிபுரா மாநிலத்தவர் எனக்கூறி வேலை பார்த்து வந்த வங்கதேசத்தவர் ஒருவர் மற்றும் மறைமலைநகரில் 3 பேரையும் கைது செய்ததோடு, புதுச்சேரியில் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலி அடையாள அட்டை தயாரித்த ஏஜென்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.