கோவை மாவட்டம், அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலில் இன்று (டிசம்பர் 1) கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நேற்று (நவம்பர் 30) விடியாத திமுக அரசின் அறநிலையத்துறை தடை விதித்திருப்பது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூரில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் பக்தர்கள் சேர்ந்து இரண்டரை கோடி ரூபாய் பணத்தில் திருப்பணிகளை செய்து முடித்துள்ளனர்.
இதனையடுத்து கும்பாபிஷேகத்துக்கு அனுமதிகோரி திருப்பணி குழு கடந்த மாதம் இந்து சமய அறநிலையத்துறைக்கு விண்ணப்பித்து வரும் டிசம்பர் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு அதற்கான அழைப்பிதழ் அச்சடித்து அனைத்து பணிகளையும் செய்து முடித்திருந்தது.
இந்த நிலைலில், நேற்று (நவம்பர் 30) மாலை 5 மணியளவில் இந்து சமய அறறிலையத்துறை இணை ஆணையர் அலுவலக அதிகாரிகள் வந்து கும்பாபிஷேகத்தை நடத்தக்கூடாது என்று போலீசாரை அழைத்து வந்த பக்தர்களை மிரட்டியுள்ளனர். அது மட்டுமின்றி கோவிலை பூட்டியுள்ளனர். இதனால் இன்று நடைபெற இருந்த கும்பாபிஷேகம் தடைப்பட்டுள்ளது.
இது பற்றி கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா கூறுகையில், அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் பக்தர்கள் தாங்களாக வழங்கிய பல லட்சம் ரூபாயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. முறையாக ஒரு மாதத்துக்கு முன்பே விண்ணபித்துள்ளனர். ஆனாலும் அரசு கும்பாபிஷேகத்துக்கு அனுமதி தராமல் இந்து வியோத போக்கை கடைபிடித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. விரைவில் அனுமதி வழங்காவிட்டால் மாவட்ட அளவில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
அதே போன்று ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
அன்னூர் கரிவரதராஜர் கோவிலில் இரண்டரை கோடி மதிப்பில் பக்தர்கள் நன்கொடையில் திருப்பணிகள் செய்யபட்டு இன்று 01.12.23 காலை 7.45க்கு கும்பாபிஷேகம் நடப்பதாக இருந்தது. 29.11.23 அதிகாலை 5.00 முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
ஆனால் அறநிலையத்துறை அதிகாரி நேற்று மாலை 5.00 மணிக்கு காவல்துறையை வைத்து கூடியிருந்த நூற்றுகணக்கான பக்தர்களை கைது செய்வோம் என மிரட்டி வெளியே அனுப்பிவிட்டு கோவிலை பூட்டியுள்ளார்.
தமிழகம் இதுவரை கண்டிராத நிகழ்வு, கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்தும் அளவிற்கு துணிந்துவிட்டது அறம்கெட்ட அறநிலையத் துறை!!
இது போன்ற அராஜகத்தை தமிழகம் கண்டிராத நிகழ்வு, கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்துகின்ற அளவிற்கு துணிந்துவிட்டது இந்த விடியாத அரசின் அறநிலையத்துறை! இது போன்ற கொடூரமான ஆட்சியை தமிழக மக்கள் கண்டிருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை என குறிப்பிட்டுள்ளார்.