மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரமே கடுமையான பதிப்பிற்குள்ளாகியுள்ளது. விடியாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் பல இடங்களில் முதல் மாடி வரைக்கும் தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் சிக்கித் தவித்து வரும் மக்களை இந்திய ராணுவம் படகு மூலமாக பத்திரமாக மீட்டு வருகிறது.
சென்னையில் நேற்று (டிசம்பர் 3) மிக்ஜாம் புயல் காரணமாக இரவு பகலாக விடாமல் மழை பெய்தது. சுமார் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததால் நகரின் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தது. மழைநீர் வடிகால்களை விடியாத திமுக அரசு முறையாகப் பராமரிக்காததால் தண்ணீர் வெளியேற முடியாமல் கழிவுநீருடன் கலந்து சாலைகளில் ஆறு போன்று ஓடியது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால் நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளானார்கள்.
இதற்கிடையே புயல் பாதிப்பால் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. முகலிவாக்கம் மற்றும் மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ள வீடுகளில் வசித்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இராணுவ மீட்புப் பணி இன்னமும் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புயல் நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அதோடு இல்லாமல் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.