சென்னையில் மிக்ஜாம் புயல் காரணம் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அது போன்று உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்த விடியாத திமுக அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச்செல்லாமல் குப்பை வண்டியில் எடுத்துச்செல்லும் அவல நிலை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாவட்டங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தாம்பரம், வேளச்சேரி, கொரட்டூர், திருவெற்றியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாமல் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்து செல்கின்றனர். அவர்களை ஒரு படகு மூலமாக மீட்ககூட இந்த அரசால் முடியவில்லை என சோகத்துடன் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை கொரட்டூர் பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை குப்பை லாரியில் எடுத்துச்செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் உத்தரபிதேசம் பீகார், ஒரிசா போன்ற . வடமாநிலங்களில் நடந்திருந்தால் இங்குள்ள மீடியாக்களும், உபிகளும் குய்யோ, முய்யோ என்று கதறியிருப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்றது விடியாத திமுக ஆட்சி என்பதால் ஊடகங்கள் அனைத்தும் அமைதி காக்கின்றன! இது ஊடக அதர்மம்!