மின்சாரம் தடை செய்யப்பட்டு, இன்டர்நெட் வசதி தடுக்கப்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக வெளி வராத சோகக் கதைகள் தற்போது வெளிவரத் துவங்கியுள்ளன. கடந்த மூன்று நாட்களாக, தங்கள் தரப்பு செய்தியை தவிர வேறு எந்த செய்தியும் வெளிவராமல், பார்த்துக்கொண்ட திராவிட மாடல் அரசின் மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஒவ்வொரு பிரபலங்கள், திரை உலகப் பிரபலங்களின் மனக்குமறல் இப்போது வெளிவர துவங்கியிருக்கிறது. அந்த வகையில், திரையிசை பாடகர் மனோவின் பதிவு அதிகம் வைரலாகி வருகிறது.
அதில் அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, வளசரவாக்கத்தில் உள்ள ராதா அவென்யூ கடந்த மூன்று நாட்களாக தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இது பற்றிய அவரது பதிவு வருமாறு, மதிப்பிற்குரிய முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநகராட்சி ஊழியர்களே, வளசரவாக்கத்தில் உள்ள ராதா அவென்யூ கடந்த 3 நாட்களாக தண்ணீரில் மூழ்கி கிடப்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது. எந்த வகையிலும் எந்த உதவியும் எங்களுக்கு வரவில்லை. நாங்கள் அதிகாரம் இல்லாமல் இருக்கிறோம் & 1000 மக்களின் துன்பத்துடன் எங்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது. வளசரவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை மீட்டெடுக்க தயவு செய்து உதவுங்கள் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மனோவின் பதிவை தொடர்ந்து, பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தைரியமாக கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களாம்!