அயோத்தி ராமர் திருக்கோவில் அர்ச்சகராக தேர்வான மாணவர் மோஹித் பாண்டே!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வருகின்ற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கிடையே அர்ச்சகர்களை தேர்வு செய்யும் பணியில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டு வந்தது. 

அதன்படி அர்ச்சகரை நியமனம் செய்வதற்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி 20 அர்ச்சகர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 3000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் நேர்காணலுக்கு 200 பேரை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் நேர்காணலானது கரசேவக்புரத்தில் நடைபெற்று வந்தது. இறுதி நேர்காணலாக 200 பேரிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆறுமாத பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு அவர்கள் அனைவரும் ராமஜென்ம பூமி வளாகத்தில் வெவ்வேறு பணிகளில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகியது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் திருக்கோவிலுக்கு காஸியாபாதைச் சேர்ந்த மாணவர் மோஹித் பாண்டே அர்ச்சகர் பணிக்கு தேர்வாகியுள்ளார். இவர் பாடசாலையில் ஏழு வருடங்கள் வேதங்கள் கற்று, பின்னர் மேல் படிப்புக்கு திருப்பதி சென்று, அதையும் வெற்றிகரமாக முடித்தவர். 3,000 பேரை நேர்காணல் செய்து கடுமையான சோதனைகளுக்குப் பின், தேர்ந்தெடுத்த 50 பேரில் ஒருவர் ஆவார். இவரது பணி ஆரம்பிக்கும் முன் 6 மாத கடும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

இதில் தேர்வாகாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அர்ச்சகர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top