கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும் என மாநில சுகாதார துறைக்கு மத்திய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவி வருகிறது. இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும்.
வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் பைப் லைன்கள் சீராக இயங்குகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் என அனைவரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கம் போல அலட்சியமாக இருந்துவிட்டு எங்களுக்கு மத்திய அரசு எவ்வித எச்சரிக்கையும் தரவில்லை என விடியாத அரசின் முதல்வர் ஸ்டாலின் சொன்னாலும் சொல்லுவார். ஏற்கனவே தென்மாவட்டங்களில் மிகஅதி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனை காதில் வாங்காமல் திமுகவின் இளைஞர் அணி மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இயங்கி வந்தது. இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது எங்களுக்கு எவ்வித முன்னெச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் தரவில்லை என பொய்யான தகவலை ஸ்டாலின் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.