மக்களவை அத்துமீறல் வழக்கில் கர்நாடக முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் உட்பட 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றபோது இரண்டு பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து கீழே குதித்து விதிமீறலில் ஈடுபட்டனர். லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் மைசூரை சேர்ந்த மனோ ரஞ்சன் ஆகியோர் வண்ண புகை குப்பிகளை வீசினர். ஹரியானாவைச் சேர்ந்த நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். நான்கு பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் லலித் மோகன் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரியவந்ததும் அவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாய் கிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகல்கோட்டை முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணன் ஜகாலியின் மகன் என்பது தெரியவந்தது. நாடாளுமன்றத்தில் வண்ண புகைக் குப்பியை வீசிய மனோரஞ்சனின் நண்பர். இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். மக்களவை அத்துமீறல் சம்பவம் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
இதே வழக்கில் உத்தரபிரதேச மாநிலம் ஜலானை சேர்ந்த அதுல் குல்ஸ்ரேஸ்தாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். தேசத்திற்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டவர்களின் குட்டு விரைவில் வெளியாகும். அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் பொய் பித்தலாட்டமும் அம்பலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.