டெல்லியில் உள்ள செண்டர் ஃபார் பாலிசி ரிசர்ச் எனப்படும் ( CPR ) கொள்கை ஆராய்ச்சி மையத்தின் எஃப்சிஆர்ஏ ( Foreign Contribution Regulation Act ) லைசன்சை ரத்து செய்து அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். .
இந்தக் கொள்கை ஆராய்ச்சி மையம் ( CPR ) காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யரின் மகள் யாமினி ஐயர் தலைமையிலான ஒரு சிந்தனைக் குழு ஆகும். ஜிகாதிகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் NGO க்களில் இந்த அமைப்பு பிரபலமானது என்று சொல்லப்படுகிறது. நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் இந்தியாவுக்கு எதிரான தன்னார்வ அமைப்புகளை கடந்த 2014 முதல் மோடி அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனமும் அப்படி ஒரு செயலில் தான் மாட்டிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிறுவனம் எஃப்சிஆர்ஏ விதிமுறைகளை தெளிவாக மீறி இருக்கிறது என்று ஆதாரத்துடன் தெரிந்த பிறகே பதிவு ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.