திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் ஜனவரி 17ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் தூய்மை பணிகளையும் மேற்கொண்டார்.
முன்னதாக ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநில முதல்வர் உள்ளிட்ட உயர் அந்தஸ்திலான பிரமுகர்களுக்கு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் தங்கக்குடத்தில் பூரணகும்பம் வைத்து வரவேற்பதுதான் முறை.
கடந்த காலங்களில் அப்படிதான் பலருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை ஆளுநருக்கு தங்க குடத்தைத் தவிர்த்து வெள்ளி குடத்தில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கு தங்க குடத்தில் பூரணகும்ப மரியாதை கொடுக்காதது ஏன் என்று பொதுமக்களும், பக்தர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சரியா என்று கோவில் தரப்பில் கேட்டபோது, ‘‘தங்கக்குடத்தை வெளியே எடுத்து மரியாதை கொடுப்பதில் பல்வேறு நடைமுறை சிரமம் உள்ளது. அதை தவிர்க்கவே வெள்ளிக் குடத்தில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது’’ என்று மழுப்பலான பதில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் தங்க குடத்தை தவிர்த்து வெள்ளி குடத்தில் பூரண கும்பம் எடுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது அறநிலையத்துறையோ, விடியாத திமுக அரசு மறைமுக உத்தரவிட்டதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.