ஆடலரசன் தம்பதியருக்கு திருச்சி, இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் சிறந்த வரவேற்பு..

அயோத்யா பிராண பிரதிஷ்டை நிகழ்வில் எஜமானாக கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய  ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக தலைவரும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான திரு ஆடல் அரசன் அவர்களுக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.  திருச்சியில் தென் தமிழக ஆர் எஸ் எஸ் தலைமை அலுவலகமான சாதனா காரியாலயத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தென் பாரத செயலாளர் திரு ராஜேந்திரன் மற்றும் ஆர்எஸ்எஸ் மாநில இணை செயலாளர் திரு சுப்ரமணியன் திருச்சி கோட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் திரு சம்பத் ஆகிய கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நிகழ்ச்சியில் அயோத்தி பிராணப் பிரதிஷ்டை எஜமானாக கலந்து கொண்டு திரு ஆடலரசன்,  அவர் மனைவி லலிதா பங்காஜவல்லி மற்றும்  நிகழ்ச்சிக்கு இதர அழைப்பாளராக  சென்று வந்த ஸ்ரீதர் மற்றும் அவர் மனைவி சுதா ஸ்ரீதர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

முதலில் பேசிய திருமதி சுதா ஸ்ரீதர் அவர்கள் பூர்வ ஜென்ம பயனால் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.  அயோத்தி நகர் முழுவதும் ராம நாமத்தால் நிரம்பி இருந்தது. அங்கு கண்ட காட்சிகளை விவரிக்க வார்த்தைகள் போதாது என  கண்ணீர் மல்க விவரித்தார்.

அதன் பின் பேசிய திரு ஆடலரசன்அவர்களின்  மனைவி திருமதி லலிதா பங்கஜவல்லி அவர்கள், கனவில் கூட நாங்கள் இது போல் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துத் கூடப்  பார்க்கவில்லை.   கடைசி நாள் வரை எங்களுக்கு எதற்கு அழைத்தார்கள் என்று முழுமையாக தெரியாது. ஆனால் ராமனின் அருளால் இந்த புனிதமான நிகழ்ச்சி கலந்து கொள்ள முடிந்தது என்று தெரிவித்தார்

இவரை தொடர்ந்து பேசிய திரு ஆடலரசன் அவர்கள், எங்களுக்கு 15 நாட்கள் முன்பு தான் நீங்கள் அங்கு  போக வேண்டும் என்று தகவலை கொடுத்தனர்.  அதுவரை நானும் சாதாரணமாக அனைத்து மக்களுக்கும் ராமஜென்ன பூமியை அழைப்பிதழை வழங்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்தேன்  முழுமையான தகவல் எதுவும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை.  தலைப்பு வந்தது நாங்கள் அயோத்தி சென்றோம்.  அங்கு  அந்த மாநிலத்தின் முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்கள் எங்களையும் எங்களுடன் எஜமானர்களாக வந்திருந்த  மற்ற தம்பதியினரையும் வரவேற்று,  நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினார்.  பாரதத்தின் அனைத்து திசைகளில் இருந்து 16 தம்பதியினர் எஜமானர்களாக கலந்து கொண்டனர்.  தமிழகத்தின் சார்பாக எங்களை அங்கு அழைத்திருந்தனர். இதை எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எல்லாரும் செய்த பணியின் பயனாகவே எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்.

இறுதியாக பேசிய தென்பாரத ஆர் எஸ் எஸ் செயலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள்,  இந்த பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக நாம் தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு அழைப்பிதழ் வழங்கி இருக்கின்றோம்.  இது மிகப்பெரிய பணி.  இந்தப் பணியில் லட்சக்கணக்கான நபர்களின் உழைப்பு இருக்கின்றது.  இதுதான் உண்மையான நமது வெற்றி.  நம் அனைவரின் சார்பாகவே திரு ஆடலரசன் அவர்கள் மற்றும் அவரது மனைவியார் அங்கு கலந்து கொண்டனர்.  எனவே நாமே அங்கு கலந்து கொண்டதாகவே இதற்கு அர்த்தம் ஆகும்.  பிற்காலங்களில் நாம் அனைவரும் அயோத்திக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

 கண்டிப்பாக நாம் அனைவரும் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்று பேசினார். 

திருச்சியை தொடர்ந்து, ராமநாதபுரம் சென்று சேர்ந்த ஆடலரசன் தம்பதியருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தரணி அக்ரோ பவுண்டேஷன் நிறுவனரும் அம்மாவட்ட பாஜக தலைவருமான தரணி முருகேசன் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். முதல் வரவேற்பு நிகழ்ச்சி சிகில்  ராஜவீதியில், சிகாகோவில் இருந்து திரும்பிய சுவாமி விவேகானந்தர் ராமநாதபுரத்தில் உரையாற்றிய இடத்தில் அதன் நினைவாக அமைந்திருக்கும், விவேகானந்தர் ஸ்தூபி முன்பு நடைபெற்றது. இரண்டாவது வரவேற்பு ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது. சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஆடல் அரசன் தம்பதியர் அங்கு அமர வைக்கப்பட்டு மலர் மரியாதை  அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரண்மனைக்குச் சென்ற ஆடல்  தம்பதியினர் சேதுபதி ராணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மூன்றாவது வரவேற்பு பட்டினங்காத்தான் விநாயகர் கோவில் முன்பு வழங்கப்பட்டது. அனைத்து இடங்களையும் இந்து இயக்க பிரமுகர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தின் முக்கிய பிரமுகர்களும்

பொதுமக்களும் கூடி அவருக்கு வரவேற்பளித்தது பாராட்டும் விதத்தில் அமைந்திருந்தது. வரவேற்பு அளித்தவர்களுக்கு ஆடலரசன் தம்பதியினர் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top