விருதுநகர் அம்மன் கோவில் திடலில் நடைபெறவிருந்த ஸ்ரீ ராமரின் பூஜை நிகழ்ச்சிகளை இந்துக்களின் விரோதியான திமுக அரசு காவல்துறையின் மூலம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் 22.01.2024 மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடையை உடைத்து மிக பிரம்மாண்டமாக ஸ்ரீ ராமரின் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தனியார் கோயில்கள், அறநிலைத்துறை கோயில்களுக்கு தடை விலக்கப்பட்ட நிலையில், பொது திடலிலும் ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டையை கொண்டாட விருதுநகர் காவல் துறையால் விதிக்கப்பட்ட தடை, நீதிமன்றம் மூலம் உடைத்து எரியப்பட்டது.
மாநில தலைவர் திரு அண்ணாமலை ஜி வழிகாட்டுதல் படி விருதுநகர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு பெண்டகன் பாண்டுரங்கன் தலைமையில் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் தனபால், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் சுப்புராஜ், ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் செல்வகுமார் மற்றும் அரசு தொடர்பு பிரிவு இராஜ கோபாலன் வழிகாட்டுதல் குழு தலைமையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
22.01.2024 மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் R.ஹேமலதா அவர்கள் அமர்வில் அறை நம்பர் 11 ல் காலை அவசர வழக்காக கோப்பிற்கு எடுத்து கொள்ளப்பட்டு அவசர வழக்காக விசாரணை நடத்தி ப்ராண பிரதிஷ்டை விழாவிற்கு தடை ஏதும் இல்லை, காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் அம்மன் கோவில் திடலில் ராமர் சீதை லட்சுமணன் அனுமான் சிலைகள் வைத்து நாதஸ்வரம் இசைக்க மண்டகப்படி மாவட்ட தலைவர் திரு பெண்டகன் பாண்டுரங்கன் அவர்கள் தலைமையில் ஆரம்பம் செய்யப்பட்டது. பின் மாணவர்களின் பஜனை பாடல்கள் பரதநாட்டியம் கச்சேரி இரவு பத்து மணிவரை நடைபெற்றது. ராம ஜென்ம பூமி மண்டகப்படி எனப் பெயரிட்டு அந்த வளாகத்தில் தரிசனம் செய்யும் பொதுமக்களுக்கு அயோத்தி ராமர் படம் அட்சதை பிரசாதமாக கல்கண்டு சாதம், புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் மற்றும் சுண்டல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கொடுக்கப்பட்டது.
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றோர்க்கு அயோத்தி ராமர் கோயில் படம் பொறித்த ஷீல்டுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு சந்திரசேகரன் நன்றி உரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சி LED SCREEN வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. உள்ளுர் தொலைக்காட்சி ஸ்ரீ டிவி, விசில் டிவி , தாமரை டிவியில் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சி நடந்த அம்மன் கோவில் திடலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஸ்வச் பாரத் திட்டத்தில் துப்புரவு பணி மேற்கொண்டனர்.